கமல்ஹாசனுடன் அந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த ரகுவரன்.. அட இதுக்காகவா?

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2023, 3:00 pm

தனது 5 வயது முதல் சினிமாவில் அடியெடுத்து வைத்து தற்போது இந்திய திரையுலகில் உலகநாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். நடிகர், அரசியல் பிரமுகர் என கலக்கி வரும் கமல்ஹாசன் நடிப்பில் இறுதியாக வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் விக்ரம். இவர் தமிழ் திரையுலகில் நிறைய பிரபல நடிகர் – நடிகைகளுடன் நடித்துள்ளார்.

Kamal- Updatenews360

ஆனால், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் பல படங்களில் கலக்கிய ரகுவரனுடன் கடைசி வரை நடிக்கவே இல்லை. அதேபோல், ரகுவரனும் சினிமாவில் 30 வருடங்களுக்கு மேல் பல திரைப்படங்களில், பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால், கடைசி வரை கமலுடன் நடிக்கவே இல்லை.

தன்னைவிட சிறப்பாக நடிக்கும் நடிகர்களை கமல் தன்னுடன் நடிக்க வைக்க மாட்டார் எனவும், அப்படி நடித்தால் அவர்கள் தொடர்பான காட்சிகளை எடிட்டிங்கில் கட் செய்துவிடுவார். இதனால் தான் கமல் படங்களில் நடிப்பதை ரகுவரன் தவிர்த்தார் என் பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் வீடியோவில் கூறியிருந்தார். ஆனால், அது உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான ‘நாயகன்’ படத்தில் நாசர் வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தது ரகுவரன்தானாம். ஆனால், அந்த வேடத்திற்காக தன்னால் முடியை வெட்டமுடியாது என ரகுவரன் மறுத்துவிட்டதால் அவருக்கு பதில் நாசர் நடித்துள்ளார். இந்த தகவலை ரகுவரனின் மனைவியும், நடிகையுமான ரோகிணியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும் ‘கமல் சார் ஒரு சிறந்த நடிகர், எத்தனையோ திறமையான நடிகர்களுடன் நடித்துள்ளார். அவருக்கு ரகுவரனை பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை என்பதுதான் நிஜம்’ எனவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 409

    2

    0