மணிரத்னத்தின் உதவியாளர் இந்த நடிகரின் மகளா; தக் லைஃப் அப்டேட்; வியப்பில் ரசிகர்கள்

Author: Sudha
8 July 2024, 12:23 pm

நாயகன் திரைப்படத்திற்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து மணிரத்னம் கமல்ஹாசன் இணையும் திரைப்படம் தக் லைஃப்.

மணிரத்தினத்திடம் ஏற்கனவே ஒரு திரை வாரிசு உதவியாளராக வேலை செய்து வருகிறார்.குஷ்பு, சுந்தர்.சி யின் இளைய மகள் அனந்திதா தான் அவர்.

அனந்திதாவுக்கு தன் அப்பா சுந்தர்.சி போன்று இயக்குனர் ஆவதே விருப்பமாம்.எனவே முன்னணி இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக இணைந்து விட்டார்.

இந்த லிஸ்டில் இப்போது இணைந்திருக்கிறார் 80 களில் முன்னணி நடிகராக வலம் வந்த ரகுமானின் மகள் அலிஷா. சினிமாவின் நுட்பங்களை கற்றுக் கொள்ள ஆர்வம் கொண்ட அவருக்கு சினிமாவை கற்றுக்கொள்ள மணிரத்தினத்தை விட சிறந்த இயக்குனர் யார் இருக்கிறார் என்பதால் அவரிடம் உதவி இயக்குனராக சேர்த்துள்ளார் ரகுமான்.

மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிறகு அலீஷா சொந்தமாக ஒரு படத்தை இயக்கலாம் அல்லது நடிகையாக நடிக்கலாம் என கூறப்படுகிறது. ரகுமான் வீட்டில் ஒரு இயக்குனரோ அல்லது நடிகையோ உருவாக இருப்பது தெரிகிறது.

  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!