அஜித்துடன் நடித்த நடிகையா இது?.. – குழந்தையும் குட்டியுமா இப்போ எப்படி மாறிட்டாங்க பாருங்க..!
Author: Vignesh4 May 2023, 11:31 am
ஒருசில படங்கள் நடித்துவிட்டு தமிழ் சினிமாவில் பின் சினிமா பக்கமே வராமல் போன நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அப்படி 2002ம் ஆண்டு தமிழில் வெளியான அஜித் நடித்த ராஜா என்ற திரைப்படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்தவர் தான் நடிகை பிரியங்கா திரிவேதி.
இதனையடுத்து, விஜய்காந்த் நடித்த ராஜ்ஜியம், விக்ரம் நடிக்க காதல் சடுகுடு, அருண் விஜய் நடித்த ஜனனம் போன்ற படங்களில் நடித்து, பின்னர் தமிழை தாண்டி பெங்காலி மற்றும் கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார் நடிகை பிரியங்கா திரிவேதி.
2003ம் ஆண்டு நடிகை பிரியங்கா திரிவேதி பிரபல கன்னட நடிகர் உபேந்திரா ராவ் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் ஆயுஷ் என மகள், மகன் உள்ளனர். 45 வயதாகும் நடிகை பிரியங்கா திரிவேதி தனது குடும்பத்துடன் சமீபத்தில் எடுத்த புகைப்படம் வெளியாக அட இது ராஜா படத்தில் நடித்த நாயகியாக என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.