மாலத்தீவில் விடுமுறையை சூப்பராக கொண்டாடும் ராஜா ராணி நடிகர்.. குதூகலமாய் இருக்கும் குளு குளு கூல் படங்கள்..!

Author: Vignesh
5 October 2022, 4:30 pm

சமீபத்தில், காதலித்து திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகர்களான சித்து-ஷ்ரேயா தம்பதி, மாலத்தீவுக்கு விசிட் நடித்துள்ள நிலையில், அங்கு காதல் பொங்க… பொங்க… இவர்கள் எடுத்து கொண்ட ஹாட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த சில வருடங்களாகவே சீரியல்களில் ஜோடியாக நடிக்கும், நாயகன் – நாயகி நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொள்ளவது அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் ராஜா ராணி 1-சீரியல் ஆல்யா மானசா -சஞ்சய். சேத்தன் -தேவதர்ஷினி, ராஜ்கமல் -லதா ராவ், தொடங்கி செந்தில்- ஸ்ரீஜா, ரக்ஷிதா – தினேஷ் ,ஆலியா- சஞ்சீவ் என எத்தனையோ தம்பதிகளைப் உதாரணமாக சொல்லலாம்.

இவர்களை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் கதாநாயகனாக நடித்த சித்துவும், கதாநாயகியாக நடித்த ஷ்ரேயாவும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின்னர் சித்து, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி 2’ தொடரில் நடித்து வருகிறார். ஷ்ரேயா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ரஜினி’ என்கிற தொடரில் நடித்து வருகிறார் .

இருவரும் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது… வெளியிடங்களுக்கு செல்லும் போது, தங்களின் ஷாப்பிங் வீடியோ, டூர் வீடியோ போன்றவற்றை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த ஜோடி தற்போது, மாலத்தீவுக்கு சென்றுள்ளது. அங்கு இருவரும் ரொமான்ஸில் மல்லுக்கட்டும் விதமாக புகைப்படங்களை வெளியிட அந்த போட்டோஸ்… வேறு லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

  • gangai amaran singing for bharathiraja video viral on internet பாட்டு பாடி பாரதிராஜாவை ஆற்றுப்படுத்திய கங்கை அமரன்… மனதை நெகிழ வைத்த வீடியோ…