அடிப்படை அறிவு இல்லாதவங்க.. அந்த மாதிரி டிரஸ் போடுறது என் இஷ்டம்.. கடுப்பான ராஜலட்சுமி..!
Author: Vignesh12 February 2024, 9:39 am
பிரபல நாட்டுப்புற ஜோடி பாடகர்களான செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் சீனியர் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கி தங்களது கானா பாடல்களால் பட்டி தொட்டியெங்கும் பெருமளவில் பிரபலமானார்கள்.

அந்த சீசனில் கானா பாடல்களை மட்டுமே பாடி செந்தில் கணேஷ் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று வெற்றியாளர் ஆனார். அதனை தொடர்ந்து செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினருக்கு படங்களில் பாடும் வாய்ப்பு குவிந்தது. இவர்கள் இருவரும் இணைந்து பாடிய சின்ன மச்சான் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து திருவிழாக்கள், சுபநிகழ்ச்சிகள் என கச்சேரிகளில் பாடி வருமானம் சம்பாதித்து வருகிறார்கள்.

இந்நிலையில், குறுகிய காலத்தில் பிரபலமான ராஜலட்சுமி சைலன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில், திரைக்கு வரை உள்ளது. இந்த படத்தில் ராதாரவி, என் ஜீவானந்தம், விஜய் பாரத், பழ கருப்பையா, அபி நட்சத்திரா, வையாபுரி, நமோ நாராயணன் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
சமீபத்தில், வெளிநாட்டில் இசைக் கச்சேரிகாக சென்றிருந்த ராஜலட்சுமி அங்கு வசிக்கும் ஒரு நபருடன் ஆங்கிலத்தில் உரையாடி வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். மேலும், அந்த வீடியோவில் ராஜலட்சுமி மார்டன் உடையில் இருந்ததை பார்த்த நெட்டிசன்கள் மோசமாக கமெண்ட் செய்தனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக பேசிய ராஜலட்சுமி ஆங்கிலத்தில் நமக்குள்ளே பேசினால், தவறுகள் தெரியாது. அதனால், ஆங்கிலத்தில் பேசி வீடியோ போட்டேன். நான் பேசியதை மட்டும் இன்றி நான் அணிந்திருந்த உடை குறித்து மோசமான கமெண்ட்கள் செய்திருந்தார்கள்.
அடிப்படை அறிவு இல்லாதவர்கள் தான் இப்படியான செயலை செய்வார்கள். எனக்கு எது சரியாக இருக்கோ அதை நான் போடுகிறேன். எனக்கு என்று ஒரு சுய ஒழுக்கம் இருக்கு, அதை நான் கடைப்பிடிப்பேன் என்று ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.