எல்லாம் பாகுபலி பிராண்ட்… வெறும் 45 நொடிக்கு படத்தின் பட்ஜெட்டை சம்பளமாக வாங்கிய ராஜமௌலி!

Author: Shree
7 July 2023, 4:04 pm

தென்னிந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலி பாகுபலி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகத்தை உலக வரைபடத்தில் கொண்டு வந்த மேவரிக் இயக்குனர் என புகழ் பாராட்டப்பட்டார். வரலாற்று கதையம்சம் கொண்டு உருவான பாடம் இரண்டு பாகங்களாக வெளியாகி சரித்திர சாதனை படைத்தது.

ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி செதுக்கி உருவாக்கிய ராஜமௌலி பிரம்மாண்ட படைப்பாளியாக முத்திரை குத்தப்பட்டார். அதன் மாபெரும் வெற்றியை அடுத்து ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் ராஜமௌலி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, பிரபல மொபைல் நிர்வாணமான ஓப்போ(OPPO) மொபைல் விளம்பரத்தில் நடிக்க ராஜமௌலி ரூ. 30 கோடி சம்பளம் வங்கியுள்ளாராம்.

வெறும் 45 நொடி மட்டுமே வரும் அந்த விளம்பரத்தில் நடிக்க ஒரு படத்தின் பட்ஜெட் அளவுக்கு சம்பளம் வாங்கியிருப்பது தென்னிந்திய சினிமாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. நட்சத்திர ஹீரோ ரேஞ்சுக்கு ராஜமௌலிக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்திருக்கிறாரார்களே என நீங்கள் யோசிக்கலாம்.

அதெல்லாம் பாகுபலி என்ற பிராண்டிற்காக தான். அதிலும் ராஜமௌலி ஒரு டீல் பேசியிருக்கிறாராம். அதாவது, இந்த விளம்பரத்தில் நடித்து ஒரு விளம்பரத்தை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று கூறி அதற்கும் சேர்த்து தான் இந்த ரூ.30 கோடி வாங்கியுள்ளாராம்.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!