அடக்கடவுளே!!! காசு கொடுத்து ஆஸ்கர் விருது வாங்கிய ராஜமௌலி… எத்தனை கோடி தெரியுமா?
Author: Shree27 March 2023, 5:06 pm
தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக பெயரெடுத்திருப்பவர் இயக்குனர் ராஜமௌலி. இவர் ஒட்டுமொத்த உலக சினிமாவே திரும்பி பார்க்கும் வகையில் பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி பிரம்மிக்க செய்தார்.
இவர் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் வைத்து RRR என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கியிருந்தார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல கலெக்ஷ்ன் குவித்தது. குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்ற நாட்டுக்கூத்து பாடலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் ஆஸ்கர் விருதினை வாங்க RRR படத்தை உலகம் முழுக்க ப்ரோமோஷன் செய்வதற்கு மட்டும் ராஜமௌலி ரூ. 83 கோடி செலவு செய்தாராம். இதை அறிந்ததும் ரசிகர்கள், இவ்வளவு காசு கொடுத்து தான் விருதை வாங்கினீர்களா? என ஷாக்காகி விட்டார்கள்.