அவங்க முன்னால மானமே போச்சுங்க.. 52 வயது நடிகை முன் அசிங்கப்பட்ட ரஜினிகாந்த்..!

Author: Vignesh
5 March 2024, 10:32 am

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடுத்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.

பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய ரஜினிகாந்த் அதன் பின்னர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். ஆரம்பத்தில் பெரும்பாலும் வில்லன் ரோல்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் பின்னர் அதிரடி ஹீரோவாக அவதாரமெடுத்து சூப்பர் ஸ்டார், தலைவர் என ரசிகர்களால் பட்டம் சூட்டப்பட்டார். கடைசியாக மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

rajini - updatenews360

இந்நிலையில், ஆடியோ லான்ச் நிகழ்ச்சி ஒன்றில், ரஜினி பேசிய சம்பவம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, நெல்சன் இயக்கத்தில் நடித்தது குறித்து காமெடியாக ஒரு சில விஷயங்களை ரஜினி பகிர்ந்து உள்ளார். அதாவது, யோகிபாபு உடன் காரில் ஷாட் எடுக்கும் போது எக்ஸ்பிரஷன் சரியாக வரவில்லை என பல டேக் எடுத்தார் இயக்குனர். அதனால், யோகி பாபு என்னிடமிருந்து சாவடிக்கிறான் சார் என்று சொல்லுவார்.

rajini - updatenews360

மேலும் ரம்யா கிருஷ்ணன் உடன் 24 வருஷத்துக்கு பிறகு நடித்ததாகவும், ஒரு காட்சியில் ரம்யா கிருஷ்ணனிடம் ஒரு ரியாக்ஷன் கொடுத்துட்டு பக்கத்துல இருக்குற மருமகளிடம் இரு எக்ஸ்பிரஷன் கொடுக்கணும். அது எட்டு டேக் எடுக்கப்பட்டது. நீலாம்பரி முன்னால இந்த படையப்பா மானமே போச்சுங்க என்று எனக்கு நானே பேசிக் கொண்டேன் என்று காமெடியாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட் என கெத்து காட்டாமல் உண்மையை கூறிய ரஜினிகாந்த் பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!