ரஜினி ரூமுக்கு அழைத்து.. 2 மணி நேரம்.. தனி அறையில் நடந்ததை பகிர்ந்து கொண்ட பிரபலம்..!

Author: Vignesh
21 March 2024, 1:55 pm

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.

rajinikanth

70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆரம்ப காலகட்டத்தில் மது குடிக்கும் பழக்கத்தை வைத்திருந்தார். பட ஷூட்டிங் சமயத்தில் புகைபிடிக்கும் மற்றும் மது அருந்தும் புழக்கத்தையும் வைத்திருந்தார். ஒரு ஹோட்டலில் அவருக்கென தனி அறை இருந்துள்ளது.

rajini - updatenews360

ஷார்ட் முடிந்ததும் தினமும் சரக்கு அடிக்க சக நடிகர்கள் யாரையாவது கம்பெனி கொடுக்க கூப்பிடுவாராம். ஆனால், தற்போது ஒரு கட்டத்தில் உடல்நிலை மோசமானதால் மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் விட்டுவிட்டார். இதை பல மேடைகளில் ரஜினிகாந்தே தெரிவித்துள்ளார். இந்நிலையில், வெண்ணிற ஆடை மூர்த்தி சில ஆண்டுகளுக்கு முன் சினிமாவிலிருந்து விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

Venniradai Moorthy

சமீபத்தில் இந்தியா வந்தவர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு ரஜினிகாந்த் பற்றிய ரகசியம் ஒன்றை வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், ஒரு படத்தின் ஷூட்டிங் மைசூரில் நடந்த போது, ஷூட்டிங் முடித்து மாலை என்ன செய்வீர்கள் என்று ரஜினிகாந்த் கேட்டார். அறையில் சும்மாதான் இருப்பேன் என்றும் மது அருந்துவேன் என்றும் கூறினேன் உடனே மாலை ரெடியா இருங்க சாய்ந்திரம் வாங்க கார் அனுப்புறேன் என்றார். குடித்துவிட்டு 2 மணி நேரம் பல விஷயங்களை பேசினோம் என்று வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியுள்ளார். மேலும், ஹோட்டலுக்கு அழைத்து சென்று சாப்பாடு வாங்கி கொடுத்து அவரே என் ரூமிற்கு அழைத்து கொண்டு விட்டுவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 234

    0

    0