தி லெஜண்ட்.. அமிதாப் பச்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்…!

Author: Vignesh
11 October 2022, 5:15 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீப காலமாக தொடர்ந்து இணையத்தில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். திரைப்படங்கள் குறித்தோ அல்லது பிரபலங்கள் குறித்தோ பதிவிடுவதை தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து வருகிறார்.

அந்த வகையில் பாலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கு தற்போது அவரது 80-வது பிறந்தநாளை கொண்டாடி வரும்நிலையில், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Rajini _updatenews360

அதில் “தி லெஜண்ட்.. எப்போதும் என்னை ஊக்கப்படுத்திய ஒருவர், 80-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் என் அன்பான மற்றும் மிகவும் மரியாதைக்குரிய அமிதாப் ஜீ-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என பதிவிட்டு இருக்கிறார்.

தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 460

    0

    0