ரஜினி படத்தில் மீனாவிற்கு முன் ரஜினி தன்னை தான் நடிக்க அழைத்தார் என்று ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி கூறி இருக்கும் வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சோசியல் மீடியா மீம் கிரியேட்டர்கள் மதுவந்தி இந்த பெயரை அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். ஒய்.ஜி. மகேந்திரன் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர். நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் தான் மதுவந்தி. இவர் சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 2016-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘தர்மதுரை’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
இந்த படத்தில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளும், நடிகையுமான மதுவந்தி முக்கிய ரோலில் நடித்திருந்தார். இது தான் நடிகை மதுவந்தி அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் வலம் வந்திருந்தார் மதுவந்தி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.
இதனைத் தொடர்ந்து நடிகை மதுவந்தி ஆர்யாவின் ‘கடம்பன்’ மற்றும் ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ஆகிய இரண்டு படங்களிலும் நடித்தார். அதன் பிறகு வெள்ளித் திரையுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை மதுவந்தி, சின்னத் திரையிலும் நுழையலாம் என்று முடிவெடுத்து சன் டிவியில் சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ‘வாணி ராணி’ தொடரிலும் நடித்தார். பிரபல நடிகை ராதிகா சரத்குமார் நடித்திருந்த இந்த சீரியலில் ‘சந்திரிகா’ என்ற கேரக்டரில் நடித்திருந்தார் மதுவந்தி.
மதுவந்தி அருண் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் ஜெமினி கணேசன் – நடிகை சாவித்ரியின் மகளான விஜய சாமுண்டீஸ்வரியின் மகன் தான் இந்த அருண் என்பது குறிப்பிடத்தக்கது. அருண், மதுவந்தி தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். இப்போது அருண், மதுவந்தி இருவருக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
2020ஆம் ஆண்டு லாக் டவுனின் போது தான் மதுவந்தியை பலரும் அறிந்தது. அந்த சமயத்தில் மதுவந்தி இந்தியாவில் 8,000 கோடி மக்களுக்கு 5000 கோடியை அவர்களது வங்கி கணக்கில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மோடி செலுத்தி இருப்பதாக கூறி இருந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ இவர் மீம் மெட்டீரியல் ஆனதை தொடர்ந்து அடிக்கடி பல முறை இவர் மீம் மெட்டீரியலாக சமூக வலைதளத்தில் இருந்து வந்தார்.
இப்படி ஒரு நிலையில் முத்து படத்தில் தன்னை தான் ரஜினிகாந்த் நடிக்க சொன்னார் என்று மதுவந்தி கூறி இருப்பது சமூக வலைதளத்தில் பெரும் கேலிக்கு உள்ளாகி இருந்தது.
அதில் பேசிய அவர் ‘நான் கல்லூரி படிக்கும் போது முத்து படத்தில் ரங்கநாயகி நடிக்க ரஜினியிடம் இருந்து அழைப்பு வந்தது அதேபோல கமல் படத்தில் நடிக்க கூட அழைப்புகள் வந்தது ஆனால் அந்த சமயத்தில் என்னுடைய பாட்டி அனுமதிக்கவில்லை.படிப்பை முடித்துவிட்டு தான் எதுவாக இருந்தாலும் என்று மிகவும் கண்டிப்பாக சொல்லிவிட்டார்’ என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த பழைய பேட்டி தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…
கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…
This website uses cookies.