‘கெட்டவார்த்தை மட்டும் பேசக்கூடாது’.. – சத்தியம் வாங்கிவிட்டு இயக்குனரை கோவில் உள்ளே விட்ட ரஜினி..!

Author: Vignesh
10 May 2023, 6:20 pm

பீஸ்ட்’ படத்தின் இயக்குனர், நெல்சன் திலீப் குமார் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை, சன் பிச்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. நெல்சன் திலீப்குமார் ரஜினியுடன் இணையும் முதல் படம் இதுவாகும்.

jailer - updatenews360

இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். ரஜினியின் பிறந்தநாளன்று வெளியான ஜெயிலர் படத்தின் தீம் மியூசிக் வேறலெவலில் ஹிட்டாகி இருந்தது, இதனால் இப்படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார்.

radharavi - updatenews360

இந்நிலையில் ரஜினி குறித்து சமீபத்தில் ராதாரவி மேடையில் பேசியிருந்தது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், இயக்குனரிடம் ரஜினி பக்காவாக கண்டிஷன் போட்ட விஷயத்தை ராதாரவி கூறியுள்ளார். அதாவது இருவரும் இணைந்து நடித்திருந்த லிங்கா படத்தின் சுவாரஸ்யத்தை ராதாரவி பகிர்ந்துள்ளார்.

rajinikanth-lingaaupdatenews360

லிங்கா திரைப்படம் கே. எஸ். ரவிக்குமார் இயக்கதில், ரஜினிகாந்த், சோனாக்சி சின்கா, அனுசுக்கா செட்டி, சந்தானம், ராதாரவி, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்தனர். இதற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்தார். இத்திரைப்படமானது ரஜனிகாந்தின் பிறந்தநாளான 12 டிசம்பர் 2014 அன்று வெளிவந்தது. இப்படம் இதே பெயரில் தெலுங்கிலும் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

rajinikanth-lingaaupdatenews360

லிங்கா படம் கதைப்படி கோவிலில் நடக்கும் சம்பவம் தொடர்பாக சிவன் கோவிலில் சூட்டிங் நடைபெறுவதற்கு முன்னதாக கோவிலுக்குள் மட்டும் கெட்ட வார்த்தை பேசக்கூடாது என இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் ரஜினிகாந்த் சத்தியம் வாங்கி கொண்டதாக ராதாரவி மேடையில் தெரிவித்துள்ளார்.

rajinikanth-lingaaupdatenews360

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 421

    2

    0