கமலுக்கு இருக்கும் அந்த குணம் ரஜினிக்கு இல்லை…. நசுக்கப்பட்ட சிவகார்த்திகேயன்!

Author:
7 August 2024, 4:36 pm

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இரு துருவ நட்சத்திரங்களாக போட்டி போட்டுக்கொண்டு தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து வந்தவர்கள் தான் உலக நாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

kamal-ajith-vijay-rajini-updatenews360

இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் பிரம்மாக்களாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். சிவாஜி கணேசன் – எம்ஜிஆர் வரிசையில் கமல்ஹாசன் – ரஜினிகாந்தின் திரைப்படங்கள் ஒரே சமயத்தில் போட்டி போட்டுக் கொண்டு வெளியாகி வசூல் ஈட்டும். நீயா நானா என அடித்துக் கொண்டு படத்தை பார்ப்பார்கள் ரசிகர்கள்.

அப்படித்தான் தற்போது அஜித் – விஜய் விக்ரம் -சூர்யா போன்றவர்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு போட்டியான நடிகர்களாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். இப்படி ரஜினி கமல் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு திரைப்படங்களில் நடித்து வந்தாலும் கமலுக்கு இருக்கும் அந்த சிறந்த குணம் ரஜினிகாந்துக்கு இல்லை என்று பலராலும் கூறப்படுகிறது . அது நிதர்சனமான உண்மை என்பதை நிகழ்காலத்தில் நடந்து வரும் சம்பவங்களைப் பார்த்தாலே நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

ஆம், கமல்ஹாசன் தன்னுடைய திரைப்படங்களில் சூர்யா, விஜய் சேதுபதி போன்ற மிகப்பெரிய நட்சத்திர நடிகர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து தன்னுடைய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் அவருக்கு ஈடாக பேசப்பட செய்வார். ஆனால், ரஜினியோ தன்னுடைய படங்களில் எந்த ஒரு நட்சத்திர நடிகர்களுக்கும் அவ்வளவு பெரிதாக வாய்ப்பு கொடுக்கவே மாட்டார்.

காரணம் தன்னை காட்டிலும் அவர்கள் எந்த ஒரு விதத்திலும் மக்களுக்கு பெரிதாக தென்பட்டு விடக்கூடாது அவர்களை நடிப்பு பேசப்பட்டு விடக்கூடாது என்ற குணம் கொண்டவர். நடிகர் ரஜினிகாந்த் அப்படித்தான் நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினியின் தீவிர ரசிகன் என பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நான் சூப்பர் ஸ்டார் உடன் ஒரு படத்தில் ஆவது நடிக்க வேண்டும் என அவர் பல மேடைகளில் கூறி இருந்தும் கூட அவருக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • valaipechu bismi said the reason behind empuraan movie re censor on sudden விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்