பிரபல நடிகரை வலுக்கட்டாயமாக நடிக்க வைத்த ரஜினி.. கட்டையால் அடித்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2023, 7:32 pm

சினிமாவில் பல அவ்வப்போது சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்வது சகஜமான ஒன்றுதான்.

அப்படித்தான் பாட்ஷா படத்தின் போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 1995ஆம் ஆண்டு ரஜினி, நக்மா, ரகுவரன் உட்பட பலர் நடித்த திரைப்படம்தான் பாட்ஷா.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தேவா இசைப்பமைப்பில் வெளியான இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்த படத்தில் இடைவேளை வரை ஆனந்தராஜ் வில்லனாக நடித்திருப்பார். அதன் பின்னர்தான் ரஜினியின் பிளாஷ்பேக் கதை வரும்.

ஆனந்தராஜ் இந்திரன் என்ற கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார். இது குறித்து ஆனந்த்ராஜ் அளித்த பேட்டியில், ஒரு முறை ரஜினி சாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

நான் வேறொரு படத்தில் பிஸியாக இருந்தேன், சரி பிரேக் டைமில் வருவதாக கூறிவிட்டு, மதிய இடைவேளையின் போது சென்றேன். பாட்ஷா படத்தில் ரகுவரன், சரண்ராஜ் என பெரிய நட்சத்திரங்கள் இருக்கும் போது நம்மல எதுக்கு வர சொன்னாருனு தெரியலயேனு யோசிச்சுக்கிட்டே போனேன்.

பின்னர் ரஜினியை சந்தித்து பேசும் போது, நீங்க இந்த படத்துல நடிக்கறீங்னு சொன்னார். படம் முழுவதும் முடிந்துவிட்டது, ஒரு வாரம்தான் ஷூட்டிங் பாக்கி இதுல நான் என்ன நடிக்கிறதுனு கேட்டேன்.

அதற்கு ரஜினி சார் என்னை அடிக்க வேண்டும் என சொன்னார், எனக்கு பயம் வந்துவிட்டது. எப்படி சார் முடியும் மக்கள் ஏத்துக்க மாட்டாங்க என கூறினேன். அவங்க ஏத்துக்க மாட்டாங்கதான் ஆனா நீங்க பண்ணா ஏத்துக்குவாங்க என கூறினார்.

உடனே அவர் காலில் விழுந்து கண்டிப்பா பண்றேன் என கூறினேன். அப்போது ஒரு நாள் படப்பிடிப்பில் சார் ஷூட்டிங் முடிஞ்சு கிளம்பிட்டேன்,. பின்னர் எனக்கான காட்சிகள் படமாக்கப்பட்டது.

அப்போது ஜெயிலில் இருந்து வெளியே வந்து ரஜினி சார் வீட்டு முன் வசனம் பேச வேண்டிய காட்சி, அந்த காட்சியில் வசனங்களை பேசி முடித்ததும் பின்னால் இருந்து வாவ் என்று ஒரு சத்தம்.

திரும்பி பார்த்தால் ரஜினி சார்.. என்னை ரசிச்சு பார்த்துக்கிட்டே இருந்தார்.நீங்க இன்னும் போகலயா உங்க ஷாட் முடிஞ்சுருக்சே என கேட்டேன். உடனே இல்ல இந்த சீன் நான் பார்த்தே ஆகணும்னு இருந்தேன் என கூறினார்.

  • Dhanush new movie announcement தனுஷ் காட்டில் வெற்றிமழை தான்…அடுத்த பட குறித்த அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்…!