சினிமாவை பொறுத்தவரை நல்ல நல்ல படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து மக்கள் மனத்தில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டால் நடிகர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் “அரசியல் ” சினிமாவை தாண்டியும் அரசியல்வாதியாக இருப்பதும் நல்ல சக்ஸஸ் தான் கொடுக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் பார்த்து வளர்ந்து வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்துவிட்டது.
அவர்கள் படங்களில் நடித்து பெயரை சம்பாதித்துவிட்டு அதைவைத்து அரசியலில் குதித்துவிட்டார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக முனைப்புடன் இருந்து வந்தார். இப்போது தான் அதற்காக சரியான நேரம் வந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
அண்மையில் “தமிழக வெற்றி கழகம் என்னும் புதிய கட்சியைத் தொடங்கி அதன் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் நடிகர் விஜய். மிக விரைவில் முழுநேர அரசியலிலும் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் அவர் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து விஜய் தனது அரசியல் திட்டங்கள் குறித்து அடுத்தடுத்தது அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் விஜய்யின் பிரவேசம் குறித்து ரஜினியின் உண்மையான எண்ணம் என்ன? என்பது குறித்து பேசியுள்ள பிரபல சினிமா விமர்சகர் வித்தகன் சேகர், ” உண்மையில் சொல்லப்போனால் விஜய் வருவதில் ரஜினிக்கு பொறாமை தான். ஒரு காலம் ரஜினி விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க மாட்டார்.
நம்மால் பண்ண முடியாத விஷயத்தை நம்மை விட சிறியவன், ஜூனியர் ஒருத்தன் பண்றானே என்ற கோபம் நிச்சயமாக அவருக்குள் இருக்கும். ரஜினி என்னதான் அமைதியானவர், நல்லவர் என பலர் கூறினாலும் விஜய் அரசியலுக்கு வருவது அவருக்கு மனதார ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏனென்றால் இதற்காக அவர் பல காலம் முயற்சித்து தலைக்கூட காட்ட முடியாத அளவிற்கு பின்வாங்கிவிட்டார். தற்போது அவரை போல் ஒருவர் அரசியலுக்கு வருவது ரஜினி பெருத்த அவமானமாக தான் உள்மனதில் நினைப்பார் என்பது தான் அப்பட்டமான உண்மை என வித்தகன் கூறியுள்ளார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.