கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.
அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. லியோ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார்.
மேலும் படிக்க: குழந்தை நட்சத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் Torture.. அவரே வெளியிட்ட உண்மை..!
இப்படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிறது. தலைவர் 171 படத்தில் அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவு இப்படத்தில் ஸ்டன்ட் மாஸ்டராக கமிட் ஆகியுள்ளார். தலைவர் 171 படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது, மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஷூட்டிங் வரும் ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கும் என லோகேஷ் சமீபத்திய பிரஸ்மீட் ஒன்றில் தெரிவித்து இருந்தார்.
மேலும் படிக்க: செல்வராகவன் கெட்ட வார்த்தையில் திட்டுனாரு.. மனசு கேட்கல.. படத்தை விட்டு வெளியேறிய சீனியர் நடிகர்..!
இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக போஸ்டர் வெளியாகி உள்ளது. அதாவது, ரஜினி கையில் வாட்ச் கை விளங்காக மாட்டப்பட்டு இருக்கிறது. மேலும், பின்னணியில் வாட்ச் தான் போஸ்டரில் இடம் பெற்றிருக்கிறது. அதனால், இது டைம் ட்ராவல் கதையாக இருக்கும் என தெரிகிறது. முன்னதாக, தலைவர் 171 படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் நல்லவன் கெட்டவன் என்று இல்லாமல் இரண்டிற்கும் இடையில் இருக்கும் என்றும், இதுவரை ரஜினி நடித்திராத ஒரு கேரக்ராக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் லோகேஷ் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் தங்கியிருக்கும் போயஸ் கார்டனில் நடப்பது என்ன என்ற விவகாரத்தை பத்திரிகையாளர் ஒருவர் தற்போது சமூக வலைதளங்களில் கூறியிருக்கிறார். அதாவது, போயஸ் கார்டன் வீட்டில் முழு நிர்வாகத்தையும் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தான் பார்த்து வருகிறார். எல்லா முடிவும் எடுப்பதோடு, ரஜினியை யாராவது சந்திக்க விரும்பினால் கூட அதை பரிசீலித்து நேரத்தை ஒதுக்குவதும் லதா ரஜினிகாந்த் தானாம்.
ரஜினிகாந்தை பார்க்க வருபவர்கள் எங்கே அமர வேண்டும் என்பது முதல் எவ்வளவு நேரம் அவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பது வரை லதா ரஜினிகாந்த் முடிவு எடுப்பாராம். வீட்டில் இருக்கும்போது ஒருமுகம் வெளியில் இருக்கும் போது ஒரு முகத்தையும் ரஜினிகாந்த் காட்டுவார் என்றும், சில பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள். மரியாதை நிமித்தமாக அவரை பார்க்க விரும்பினால் லதா ரஜினிகாந்த் பரிசீலனைக்கு பின் அனுமதிக்கப்படுவார்கள்.
அப்படி அனுமதி வாங்கி வருபவர்கள் வருபவர்களுக்கு இரண்டு நிமிடம் ரஜினி வருவார் நல்லா இருக்கீங்களா என இரு வார்த்தை பேசுவார். அவ்வளவுதான் அதற்கு மேல் அவர் அங்கிருந்து சென்று விடுவார். மேலும், ஒருவரை சந்திக்க தனது ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வர சொன்னால், அங்கு மிகவும் ஜாலியாக எல்லாவற்றையும் ரஜினி பேசுவார். தன் வாழ்க்கை வெற்றி தோல்வி வாழ்வில் சந்தித்த அனுபவங்கள் நடப்பு அரசியல் போன்ற எல்லாவற்றையும் பேசுவார். அதேபோல், கோபப்பட்டு வாய்க்கு வந்தபடி, பேசி விடுவோம் என்பதால் தான் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு ரஜினிகாந்த் சிரித்தபடி ரியாக்ஷன் கொடுத்து சென்று விடுவார் என்று மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.