ரஜினி ஹீரோ.. வில்லன் கமல்… மாஸ் படம் பண்ணனும் பிரபல இயக்குனரின் ஆசை..!

Author: Rajesh
25 March 2022, 1:28 pm

பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் உலக அளவில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் இயக்குனர் ராஜமவுலி. இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படம் இன்று வெளியாகி சக்கைப் போடு போட்டு வருகிறது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் நடித்துள்ளனர்.

ராஜமௌலி இயக்கிய அனைத்து படங்களும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. சில நாட்களுக்கு முன்பு இந்த ஆர்ஆர்ஆர் பட புரமோஷனுக்காக ராஜமௌலி மற்றும் படக்குழுவினர் அனைவரும் சென்னைக்கு வந்து இருந்தனர்.

அப்போது பத்திரிகையாளர்கள் அனைவரும் ராஜமவுலியிடம் பல கேள்விகளை கேட்டனர். அதற்கு மிகவும் சுவாரசியமாக பதில் அளித்த ராஜமௌலி தன்னுடைய அடுத்த திரைப்படம் பற்றிய ஒரு கருத்தையும் சூசகமாக வெளியிட்டுள்ளார். அதாவது அவருக்கு தமிழ் நடிகர்களை வைத்து பிரமாண்டமாக படம் இயக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக இருக்கிறது.

அதுவும் ரஜினி மற்றும் கமல் இருவரையும் ஒன்றிணைத்து ஒரு படமாவது இயக்கி விட வேண்டும் என்பது அவரின் தீராத ஆசை என்றார். அந்த கதையில் கமல் வில்லனாகவும் ரஜினி ஹீரோவாகவும் வைத்து படம் இயக்க வேண்டும் என்பதே இதில் இன்னும் சுவாரசியம்.

தமிழில் பல முன்னணி நடிகர்களும் ராஜமௌலியின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். அப்படியிருக்கும்போது ராஜமௌலி ரஜினி, கமலுடன் இணையவேண்டும் என்று பெரும் முயற்சி செய்து வருகிறார். கூடிய விரைவில் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1483

    7

    5