“அதெல்லாம் முடியாது”.. வளர்த்து விட்ட இயக்குனரிடமே வேலையை காட்டிய ரஜினி.. சாதித்து காட்டிய இயக்குனர்..!
Author: Vignesh28 February 2023, 1:45 pm
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சினிமாவில் செய்யாத சாதனைகளே கிடையாது. பஸ் கண்டக்டராக இருந்து தமிழ் திரையுலகையே ஆளும் அளவுக்கு அவர் வளர்ந்திருக்கிறார் என்றால், அவர் நடிப்பும், அவரது ஸ்டெயிலும்தான் காரணம். நடிகர் ரஜினிகாந்த் 80களில் இருந்து தற்போது வரை தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலை நிறுத்தி வருபவர்.
இவரை சினிமாவில் முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரையே சேரும். பழைய கால இயக்குநர்கள் முதல் தற்போதைய இளம் இயக்குநர்கள் வரை அனைத்து தரப்பினரின் கதைகளிலும் நடித்து வருகிறார். தற்போது, அவர் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வருகிறது ஜெயிலர் திரைப்படம்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரஜினி குறித்து சில சுவாரசியமான சம்பவங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த வகையில் தன்னை அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் சிகரம் பாலசந்தரை எந்த ஒரு தருணத்திலும் ரஜினி மறந்ததே இல்லையாம், அப்படி ஒரு சமயம் ‘நெற்றிக்கண்’ என்ற படத்திற்காக ரஜினியிடம் இயக்குனர் பாலசந்தரின் கவிதாலயாவில் முக்கிய பொறுப்பில் இருந்த பிரமிடு நடராஜன் கால்ஷீட் வாங்க சென்று இருந்தாராம்.
அப்போது நெற்றிக்கண் படத்தை இயக்குனர் பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தான் தயாரித்து வெளியிட்டு உள்ளது. அந்த சமயம் ரஜினியை பார்க்க பிரமிடு நடராஜன் செல்ல அதுவரை நடிகர் ரஜினிகாந்த் ஒரு வளரும் நடிகர் என்ற அந்தஸ்தில் தான் இருந்தார்.
இதனிடையே, ஏவிஎம் நிறுவனத்திடம் பிரமிடு நடராஜன் ரஜினியின் சம்பளம் குறித்து முன்னதாகவே கேட்டு அறிந்து கொண்டு, படத்தை பற்றி எல்லாம் ரஜினியிடம் பேசி முடித்ததும் அட்வான்ஸ் தொகையை பிரமிடு நடராஜன் ரஜினியிடம் எடுத்து கையில் நீட்ட அதை பார்த்ததும் ரஜினி உடனே எழுந்து ‘ஐய்யயோ அதெல்லாம் வேண்டாம், பாலசந்தர் சார் படத்திற்கு நான் அட்வான்ஸ் வாங்கனுமா? என கேட்டு வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.’
உடனே ‘பாருங்க ரஜினி, உங்க சம்பளம் என்ன என்பதை ஏவிஎம் நிறுவனத்திடம் பேசி தான் நான் இங்கே வந்திருக்கிறேன் என பிரமிடு நடராஜன் தெரிவித்துள்ளார். அதுவும் போக நீங்க இதை வேண்டாம் என்று சொல்லிவிட்டால் இந்த ப்ராஜக்டையே விட்டு விடுவோம் என்றும், நீங்கள் மற்றும் எஸ்.பி,முத்துராமன் இணையும் இந்த கூட்டணியை நாங்கள் தொடர மாட்டோம்’ என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
அதனால் எஸ்.பி,முத்துராமன் இயக்கியிருந்த நெற்றிக்கண் படத்திற்கு, ரஜினி வேறு வழியில்லாமல், இவர் விட மாட்டார் போல என நினைத்து அதன் பிறகே அட்வான்ஸ் தொகையை பெற்றுக் கொண்டாதாகவும், இயக்குனர் மீது ரஜினி வைத்த அன்பும் நன்றியும் அன்று வெளிப்பட்டதாக, இந்த சுவாரஸ்ய தகவலை பிரமிடு நடராஜன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.