“அந்த விசயத்துல கமல விட ரஜினி எவ்வளவோ மேல்.. இவர்கிட்ட உஷாராக இருக்கணும்”..: பிரபல செய்தியாளரின் சர்ச்சை பேச்சு..!

Author: Vignesh
27 January 2023, 11:30 am

கோலிவுட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் ஜாம்பவான்களான திகழ்ந்து வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன், இவர்கள் இருவரும் ஒரே சமயத்தில் அரசியலுக்கு வருவதாக அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை ஆதரவை பெற்றவர்கள்.

அதன்பின் ரஜினிக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அவர் புதிதாக துவங்க இருந்த அரசியல் கட்சியை துவங்காமல் அரசியலை விட்டு விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார்.

Kamal rajini updatenews360

இது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தாலும் முன்வைத்த காலை பின் வைத்த ரஜினி எவ்வளவோ மேல் என பிரபல செய்தியாளர் ஒருவர் கமலை கடுமையாக தாக்கி பேசி இருக்கிறார்.

செய்தி தொலைக்காட்சிகளில் அரசியல்வாதிகளையும் திரை பிரபலங்களையும் கேள்விகளால் திணறடிக்கும் செய்தியாளர் முக்தர் தற்போது மேடையில் ரஜினியுடன் கமலை ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

rajini -kamal - updatenews360

பல இடங்களில் ரஜினி செய்த தவறுகளையும் சுட்டிக் காட்டி இருந்தாலும் துணிச்சலுடன் அரசியலை ஆரம்பிக்கிறேன் என சொல்லிவிட்டு, அந்த முயற்சியை கைவிட்டது பலராலும் விமர்சிக்கப்பட்டாலும், அவர் சூப்பர் ஸ்டார் என்ற சொல்லுக்கு நிகராக துணிச்சலுடன் கட்சியை ஆரம்பிக்கிறேன் என்ற சொன்ன பின், அதைவிட பல மடங்கு துணிச்சலுடன் கட்சி ஆரம்பிக்கவில்லை என முடிச்சு விட்டுவிட்டார் என்று செய்தியாளர் முக்தர் தெரிவித்துள்ளார்.

mukthar - updatenews360

இதற்கு காரணம் தன் ரசிகர்கள் தொண்டர்கள் பாதிப்பு அடையாம இருக்க தன்னை கேலி செய்தாலும் பராவயில்லை என்று ரஜினி முடிவு எடுத்தது தான். ஆனால் இப்போது ஒரு சில நடிகர்கள் தன்னுடைய ரசிகர்களையும் இளைஞர்களையும் வசப்படுத்தி தன்னுடைய ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொண்டு அதை வாக்கு வங்கியாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.

ஆனால் தன்னுடைய வாழ்க்கையில் ரஜினிகாந்த் ஒரு முடிவை எடுத்து விட்டோம் மற்றவர்களுக்காக அந்த முடிவில் தொடர்ந்து போக வேண்டும் என்று நினைக்காமல் துணிச்சலுடன் எடுத்த முடிவை தன்னுடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய பாடகத்தை புகுத்தியுள்ளார்.

rajini kamal - updatenews360

இதைப் புரிந்து கொண்டு அரசியலில் தன்னுடைய மானத்தை காப்பாற்றிக் கொள்ள தன் ரசிகர்களை அடகு வைக்கும் கமலஹாசனிடம் உஷாராக இருக்க வேண்டும் என முக்தர் கமல் கூறித்து பேசியது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல் ரசிகர் மன்றம் என பெரும் திரளான ரசிகர்களை வசப்படுத்தி இருக்கும் டாப் ஹீரோக்களிடமும் ஜாக்கிரதியாக இருக்க வேண்டும் என்றும் முக்தர் தெரிவித்துள்ளார்,

இதன் மூலம் கமலஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை மேடையில் கிழித்து தொங்க விட்டிருக்கிறார்.

Kamal - Updatenews360

மேலும் கமலஹாசன் தற்போது இடைத்தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்பதற்காக மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், அவருடைய ரசிகர்களை வைத்து ஆதாயம் தேட வேண்டாம் என்றும் பிரபலங்கள் பலரும் மேடையில் விளாசி வருகிறார்கள். அதிலும் முக்தரின் பேச்சு தற்போது மீடியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 548

    0

    0