vijay dp
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் பிஸியாக தற்போது நடித்து வருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கும் நிலையில் வரும் அக்டோபர் மாதம் லியோ படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, ஆரம்பத்திலிருந்து காதலை முன்வைத்த படங்களில் நடித்து வந்த விஜய் தற்போது மாஸ் நடிகராக திகழ்ந்து வருகிறார். அப்படி காமெடி கலந்த காதல் படத்தில் பார்த்த தளபதியை வேறு மாதிரியான விஜய்யாக பார்க்க வைத்த படம் சச்சின். இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் 2005ல் வெளியான சச்சின் படம் தோல்வி படமாக அனைவராலும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கு காரனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சந்திரமுகி படம் தான் என்று சொல்லப்படுகிறது. அதாவது, சச்சின் படம் தோல்வி படமா என்ற கேள்விக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் தானு அவர்கள் பல ஆண்டுகள் கழித்து ஒரு உண்மையை தெரிவித்து இருக்கிறார்.
மேலும், சச்சின் படம் தோல்வி கிடையாது எனவும், 200 நாட்கள் திரையரங்கில் ஓடியது. ஆனால் சந்திரமுகி படம் கிட்டத்தட்ட 800 நாட்கள் திரையரங்கில் ஓடி மெகா ஹிட்டானதால் இது எதுவும் வெளியில் தெரியாமல் போய்விட்டது எனவும், மற்றப்படி சச்சின் படம் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது என்று தானு தெரிவித்து உள்ளார்.
சந்திரமுகியால் ரஜினிகாந்த் அன்று எப்படி விஜய்யின் வசூலை கெடுத்தாரோ, அதேபோல் தான் சமீபத்தில் வாரிசு படத்திற்கு போட்டியாக துணிவு படத்தினை வெளியிட்டு விஜய்க்கு பெரிய அடியை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.