அந்த ஒரு செயலுக்காக யுவனை ஒதுக்கும் கமல் – ரஜினி: பின்னணி இசையின் முன்னணி நாயகனுக்கு இந்த நிலைமையா..? அப்செட்டில் ஃபேன்ஸ்..!
Author: Vignesh23 January 2023, 7:30 pm
தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து இசைஞானி என்ற பட்டதோடு புகழப்பட்டு வருபவர் இளையராஜா. இசையமைப்பாளர் இளையராஜா ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் உச்ச பட்ச இசையமைப்பாளராக இருந்தவர்.
ஆயிரக்கணக்கில் படங்களுக்கு இசையமைத்து இருக்கும் அவரது பாடல்களுக்கு தற்போதும் ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இப்போது வரை இருந்து வருகிறது. குறிப்பாக, ரஜினி கமல் இந்த அளவிற்கு பெரிய இடத்திற்கு வர இளையராஜா ஒரு காரணமாக இருக்கிறார்.

அப்படி அவருடன் பயணித்து வெற்றி கண்ட ரஜினி மற்றும் கமல், இசைஞானியின் மகன் யுவன் சங்கர் ராஜாவிற்கு மட்டும் வாய்ப்பு கொடுக்காமல் இருந்து வருகிறார்கள் என்று பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

இதற்கு காரணம் யுவன் சங்கர் ராஜா, இரவு நேரத்தில் இசை அமைத்து பகலில் தூங்குவது பழக்கம் கொண்டவராம். அப்படி யுவன் சங்கர் ராஜா இரவில் இசையமைக்கும் போது அந்த படத்தின் நடிகர்களும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று கூறுவாராம். எப்படி தங்களால் அவருடன் இரவு நேரத்தில் இருக்க முடியும் என்று கமல் ரஜினி ஒதுக்கி வந்ததாக கோலிவுட் வாட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
ஆனால் ரஜினியின் சமீபத்திய படத்தில், பணியாற்ற இசைஞானியின் மகன் யுவன் சங்கர் ராஜா ஒப்புக்கொண்ட போது அதை அனிருத் வந்து தட்டிப்பறித்துவிட்டாராம்.