அவசர அவசரமாக பெங்களூரு புறப்பட்டு சென்ற ரஜினி… என்ன ஆனது? வெளியான தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2023, 4:01 pm

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்கிறார்.

இதன்பின் லைக்கா தயாரிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று பெங்களூருக்கு புறப்பட்டு சென்றிருந்தார். அங்கிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கூட வெளிவந்தது.

இந்நிலையில், தனது அண்ணன் சத்யநாராயணனின் 80வது ஆண்டு பிறந்தநாளை சிறப்பிக்க சென்றுள்ளார். அங்கு நடந்து பூஜையிலும் ரஜினிகாந்த் கலந்துகொண்டுள்ளனர்.

ரஜினியும், அவரது அண்ணன் சத்யநாராயணனும் பூஜையில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 916

    36

    11