ரஜினியின் முத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற அஜித்..? அட இது யாருக்கும் தெரியாத விஷயமா இருக்கே..!
Author: Rajesh2 April 2023, 1:20 pm
தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.
70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. முக்கியமாக திறமை இருந்தும் வாய்ப்பில்லாமல் தவித்து வந்த பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் போன்றோருக்கு ரஜினிகாந்தின் படங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது.
அந்த வகையில், நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் வெற்றி நடிகராக வலம் வருவதற்கு காரணமே ரஜினிகாந்தின் முத்து திரைப்படம் தான் என்ற தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக 100 கோடி வரை சம்பளம் வாங்கி வருபவர் நடிகர் அஜித். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பின் மூலம் வெற்றி பெற்றவர் அஜித்.
தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் பல சரிவுகளை சந்தித்த இவர், விடா முயற்சி செய்து தமிழ் சினிமாவில் இன்று உச்சத்தில் உள்ளார். சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில் அகத்தியன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வெற்றி திரைப்படம் வான்மதி. இப்படத்தின் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் இதற்கு முன்பாக திரைப்பட திரையரங்கு விநியோகஸ்தராக இருந்தார்.
வான்மதி படத்தை தயாரித்து வந்த வேளையில் பணமில்லாததால் இப்படத்தை பாதியிலேயே சிவசக்தி பாண்டியன் நிறுத்தியுள்ளார். அந்த சமயத்தில் தான் ரஜினிகாந்தின் முத்து திரைப்படத்தை சிவசக்தி பாண்டியன் திரையரங்கிற்கு விநியோகம் செய்துள்ளார். படம் வெளியாகி, முத்து படத்திற்கு கிடைத்த லாபத்தை வைத்து அஜித்தின் வான்மதி படத்தை எடுத்தாராம்.
இந்த படம் ஹிட்டான நிலையில், மீண்டும் இதே கூட்டணியில் காதல் கோட்டை படமும் உருவாகி தேசிய விருதை பெற்றது. இப்படத்திற்கு பின்பு தான் அஜித்தின் திரைவாழ்க்கை பிரகாசமாக தொடங்கியது. இப்படி ரஜினியின் முத்து படத்தின் மூலமாக வந்த லாபம் தான் அஜித்தின் திரைவாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்துள்ள தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.