அடுத்த படத்திற்கு தயாராகும் ரஜினி.?

Author: Rajesh
2 February 2022, 1:35 pm

ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்திய தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் விவாகரத்து செய்து கொண்டது தானாம். ஏற்கனவே அவரது இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்து 2-வது திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய சினிமாவில், பல இளம் நடிகர்களுக்கு சவால் கொடுத்த தன்னுடைய முதல் இடத்தை இன்றும் தக்க வைத்துக் கொண்டுள்ளார். எவ்வளவு காசு பணம் சம்பாதித்து என்ன பண்றது, ஒரு நாள் கூட நிம்மதி இல்லை என கண்ணீர் விட்டு வருகின்றாராம்

இந்த நிலையில் எதுவும் வெளியே தெரியக் கூடாது, என்பதற்காக தொடர்ந்து படங்களில் நடிக்கவும் முடிவு செய்துவிட்டாராம். சினிமா வாழ்க்கையாவது நன்றாக இருக்கட்டும் என முடிவு செய்துவிட்டாராம் ரஜினிகாந்த். விரைவில் ரஜினிகாந்தின் அடுத்த படம் பற்றிய செய்தி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!