“ரஜினி 169” புதிய தகவல்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Author: Rajesh
17 February 2022, 7:42 pm

“அண்ணாத்த” படத்திற்குப்பிறகு ஒரு வெற்றிப்படத்தையாவது கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ரஜினி. அந்த வகையில், ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். ரஜினியின் 169 வது படமாக உருவாகும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைச் செய்தது. ஆனாலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் ‘ரஜினி 169’ படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. தற்போது போஸ்ட் புரொடொக்‌ஷன் பணிகள் போய்க்கொண்டிருக்கிறது. வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கலையொட்டி ‘ரஜினி 169’ படத்தினை திரைக்குக் கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

  • Actress Sneha has a rare disease.. Prasanna praises her courage! நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்.. தைரியத்தை பாராட்டும் பிரசன்னா!