பெற்ற மகனை கூட மட்டம் தட்டுறீங்க…? மேடையில் கிழித்த ரஜினிகாந்த் – திருட்டு முழி முழித்த இளையராஜா!

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள் எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார். அத்திமட்டுமல்லாமல் தன்னை தவிர யாரும் திறமை இருப்பவர்கள் கூட வளரக்கூடாது என கீழ்த்தரமான எண்ணம் கொண்ட மட்டமான மனிதர் இளையராஜா என பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

அந்தவகையில் அண்மையில் மறைந்த நடிகர் மனோபாலாவுக்கு அஞ்சலி செய்தி வெளியிட்ட அவர் தற்பெருமை பேசி விமர்சனத்திற்கு உள்ளானார். மேலும் இளையராஜா தனது நெருங்கிய நண்பரான மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் உயிர் போகும் தருவாயில் கூட அவரை சென்று பார்க்கவில்லை. மலேசியா வாசுதேவன் அந்த ஏக்கத்தில் உயிர்விட்டார். அதோடு, இளையராஜா தன் உடன் பிறந்த தம்பி கங்கை அமரன் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன அவரது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு தடுத்தார்.

அதுமட்டும் அல்லாமல், இளையராஜா ஏஆர் ரஹ்மானின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டு அவர் எங்க வளர்ந்திடுவாரோ என்ற ஒரு வித பயத்தில் அவரது வளர்ச்சியை பலகோணங்களில் தடுத்து நிறுத்தியிருக்கிறார். மேலும் பல மேடைகளில் சக திரைத்துறை பிரபலங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி அவமதித்திருக்கிறார்.

இந்நிலையில் 1993ம் ஆண்டு ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி நடித்த வள்ளி திரைப்படத்திற்கு இசையமைக்க சொல்லி இளையராஜாவிடம் சென்று கால்சீட் கேட்டுள்ளார் ரஜினிகாந்த். அதற்கு இளையராஜா, என் மகன் கார்த்திக் ராஜா இசையமைத்தால் உங்களுக்கு ஓகே வா? என கேட்டுள்ளார். அதற்கு ரஜினி உங்க இஷ்டம் எதுவோ அதையே பண்ணுங்க என கூறியிருக்கிறார். அதன் பின்னர் கார்த்திக் ராஜா இசைத்து வெளியான பாடல் தான், ‘என்னுள்ளே என்னுள்ளே’ அந்த பாடல் மாபெரும் ஹிட் அடித்துள்ளது. ஆனால், அந்த க்ரிடிட்ஸ் மகன் கார்த்திக் ராஜாவுக்கு கொடுக்காமல் தன் பெயரை போட்டுக்கொண்டுள்ளார் இளையராஜா.

இதை ஒரு முறை ரஜினி மேடையிலே கூறி அசிங்கப்படுத்த இளையராஜா என்ன செய்வதென்றே தெரியாமல் திருட்டு முழி முழித்துள்ளார். பெற்ற மகனின் திறமையை பார்த்தே வளரவிடாமல் தடுக்கும் அளவுக்கு மோசமான கெட்ட எண்ணம் பிடித்தவரா இளையராஜா? என பலரும் வியந்து அவரை விமர்சித்துள்ளனர்.

Ramya Shree

Recent Posts

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

8 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

10 hours ago

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

10 hours ago

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

11 hours ago

இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!

அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…

12 hours ago

அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!

அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…

13 hours ago

This website uses cookies.