நடிகையின் அக்காவிற்கு ரூட்விட்ட சூப்பர் ஸ்டார்.. கமல் பெயரை கேட்டதும் ஓட்டம் பிடித்த சம்பவம்..!

Author: Vignesh
9 May 2023, 10:44 am

இரு உச்சக்கட்ட நடிகர்களாக தமிழ் சினிமாவில் திகழ்ந்து கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று வருபவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன். இவர்கள் இருவரும் தங்களுடைய திறமையால் தனக்கென்று ஒரு பெயரை நிலைநிறுத்திகொண்டு வருகிறார்கள்.

Kamal rajini updatenews360

இந்த நிலையில் ரஜினி குறித்து ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார். அதில், சுகாசினி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது அவரும் அவருடைய அக்காவும் அருகில் இருக்கும் ஒரு பார்க்கிற்கு நடைப்பயிற்சி செல்வது வழக்கமாம். சுகாசினியின் சகோதரி மிகவும் அழகாக இருப்பாராம்.

ஒரு நாள் நடை பயிற்சி மேற்கொண்ட சமயத்தில் திடீரென கார் ஒன்று வந்து நின்றது. அந்தக் கார் கண்ணாடியை இறக்கி ஒரு ஆள் லிப்ட் எதுவும் வேணுமா என்று கேட்டதாகவும், அது வேறு யாரும் இல்லை நடிகர் ரஜினி தான்.

suhasini-updatenews360

உடனே அப்போது, சுகாசினி தான் கமலஹாசனின் அண்ணன் பொண்ணு என்று கூறியதாகவும், அதைக் கேட்டதும் ரஜினி உடனே காரை எடுத்து கிளம்பி விட்டாராம். இந்த சம்பவத்தை கூறிய சுகாசினி, இது ரஜினிக்கு கூட ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் அது அப்பொழுது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் என்று தெரிவித்துள்ளார்.

suhasini-updatenews360
  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?