உங்க கூட நான்…காலில் விழாத குறையா கெஞ்சிய மீனா – ரிஜெக்ட் செய்த ரஜினி!
Author: Shree12 April 2023, 12:47 pm
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.
இந்நிலையில் மீனா நல்ல கதை ஞானம் உள்ளவர் என்பதால் ரஜினிகாந்த் மீனாவிடம் படையப்பா படத்தின் கதையை கூறி அவரது கருத்து என்ன என்று கேட்டாராம். இதில் நீலாம்பரி ரோல் மீனாவுக்கு மிகவும் பிடித்துப்போக நான் நடிக்கிறேன் என கூறினாராம்.
ஆனால், அதை கேட்டு ஷாக்கான ரஜினி உங்களுக்கு குழந்தை முகம், இது போன்ற வில்லி கேரக்டர்கள் செட்டாகாது என்று மறுத்துள்ளார். விடாமல் ஆடம் பிடித்த மீனாவை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பிய ரஜினிகாந்த் பின்னர் அவரது அம்மாவிடம் எடுத்துக்கூறி இருக்கிறார்.
அதன் பின்னர் அந்த வேடத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கிறார். இன்று வரை ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி வேடம் யாராலும் மறந்திருக்க முடியாது. அந்த வருத்தம் இன்னும் மீனாவுக்கு இருப்பதாக அவரே பல பேட்டிகளில் கூட கூறியிருக்கிறார்.