பத்து தல படத்தை நிராகரித்த நட்சத்திர நடிகர் – சிம்புவை பார்த்து இப்போ பொறாமை படுறாரு!
Author: Shree22 March 2023, 4:19 pm
நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு பத்து தல என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கியுள்ளார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிவராஜ்குமார் கேரக்டரில் சிம்புவும், ஸ்ரீமுரளி கேரக்டரில் கௌதம் கார்த்திக்கும் நடித்துள்ளனர். சிம்பு இப்படத்தில் டான் ரோலில் நடித்துள்ளார். டான் என்பதால் ரஜினிக்கு இக்கதை பொருத்தம் என முதலில் அவரிடம் தான் கேட்கப்பட்டதாம்.
ஆனால், அவருக்கு கதை பிடித்திருந்தாலும் ரீமேக் என்பதால் கொஞ்சம் யோசித்துவிட்டு வேண்டாம் எனக்கூறிவிட்டாரம். அதன் பின்னர் சிம்பு கைக்கு வந்ததும் அவர் உடனே ஓகே சொல்லி முழு மனதோடு வேற லெவலில் நடித்துள்ளாராம்.
எல்லோரும் படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என நம்பிவிட்டார்கள். இப்போது இதை கேட்ட ரஜினி. மிகவும் வருத்தப்பட்டு அடடா கைக்கு வந்ததை நழுவ விட்டுட்டோமே என சிம்பு மீது பொறாமையில் இருக்கிறாராம்.