அவர் வந்தாலே நடுங்குவாரு ரஜினி… பிரபல வில்லன் நடிகரை பார்த்து மிரண்டுப்போன ஹீரோக்கள்!

Author: Shree
16 May 2023, 10:38 pm

பார்ப்பதற்கு ஹேண்ட்ஸம் மேனாக இருந்து வில்லன் ரோலில் ஹீரோக்களை விரட்டி அடுத்தவர் நடிகர் ரகுவரன். தமிழ் சினிமா உலகில் மிக பிரபமாலான வில்லனாக இருந்தவர் ரகுவரன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் முதன்முதலில் 1982ம் ஆண்டு வெளியான அக்கா என்ற மலையாள படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

அதன் பின்னர் இவர் தமிழில் ஏழாவது மனிதன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். மேலும், இவர் ஆரம்பத்தில் ஹீரோ மற்றும் துணை கதாபாத்திரத்தில் தான் நடித்து இருந்தார். அதன் பின்னர் இவர் வில்லனாக நடிக்க துவங்கினார். ஆனால், ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் தான் இவருக்கு நன்றாக பொருந்தியது. மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்தது. அவர் வில்லனாக நடித்தால் நிச்சயம் அப்படம் வெற்றிப்படமாகிவிடும். எனவே தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ரகுவரன் ரஜினி, கமல், விஜயகாந்த் சரத்குமார், கார்த்தி உள்ளிட்டோரின் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் ஜோடி, ஸ்டார் படத்தின் இயக்குனர் பிரவீன் காந்தி, நடிகர் ரகுவரன் வில்லனாக நடிக்க வந்து நின்றாலே அவரது மிரட்டலான நடிப்பை பார்த்து ஆட்டோமேடிக்கா எப்படியாப்பட்ட ஹீரோவாக இருந்தாலும் நடுநடுங்கி விடுவார்கள் என கூறியிருக்கிறார். அப்படித்தான். ரஜினியும் பாட்ஷா படத்தின் ரகுவரன் உடனான காட்சியில் நடுங்கிட்டே இருந்தாராம்.

https://www.instagram.com/reel/CsS98LINKuD/?igshid=YzAyMDM1MGJkZA%3D%3D

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 668

    1

    0