ரஜினி ரூட்டை பக்காவா பின்பற்றும் AK., இந்த விஷயத்துக்கு விஜய் சரிப்பட்டு வரமாட்டார்: பயில்வான் பகிரங்க விமர்சனம்..!
Author: Vignesh7 February 2023, 2:30 pm
சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரூட்டை, நடிகர் அஜித் அப்படியே பின்பற்றுகிறார் என பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் அஜித் குறித்த முக்கிய விஷயங்களை ஒரு பேட்டியில் போட்டு உடைத்துள்ளார். அதாவது ரஜினி எப்போதும் சொல்வதுண்டு, தனக்கு வரும் கூட்டம் என்பது காசு கொடுத்து வரும் கூட்டம் அல்ல, அது தானாக வரும் கூட்டம், இது எனக்கு எப்போதும் வரும் என உறுதியாக பேசுவார் என்றும், இதே ரூட்டை பின்பற்றித்தான், நடிகர் அஜித்தும் தனக்கான கூட்டத்தை சேர்த்துள்ளார் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
அஜித்துக்கும் ரஜினிக்கும் வரும் கூட்டமும் தானா சேர்ந்த கூட்டம் தான். ஆனால் விஜய்க்கு அப்படி இருக்குமா? என்பதை சொல்ல முடியாது என ஒரு குண்டை போட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் இந்த விஷயத்தில் அவர் ஒன்றும் சோடை போனவர் அல்ல, தனக்கென தனி ரசிகர் மன்றத்தை வைத்துள்ளார். அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார் என்றும், ஆனால், ரஜினி ரூட்டை பக்காவா பின்பற்றுவது அஜித் மட்டும் தான், என்பதே திரை பிரபலங்களின் கருத்தாக உள்ளது என பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக பேசி இருப்பது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.