நெனச்ச மாதிரியும் இல்ல… பிடிச்ச மாதிரியும் இல்ல.. நெல்சனால் கடுப்பான ரஜினி – ஜெயிலர் பார்த்த பின் பெரும் குழப்பம்!

Author: Shree
8 August 2023, 6:24 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும், நம்பர் ஒன் ஹீரோவாகவும் பார்க்கப்படுபவர். இதுவரை 168 திரைப்படங்களில் நடித்துள்ள இவரின், பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது இப்பொழுதும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுக்க முடிவெடுத்துள்ளார்.

rajinikanth

அதன்படி அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 169வது திரைப்படமான ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகி வருவதால் இந்த படத்தில் ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்தும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

rajinikanth

சினிமா உலகில் வெற்றியை கண்டு வரும் ரஜினி மறுபக்கம் நிஜ வாழ்க்கையில் தனது குடும்பத்துடன் பொழுதை கழிப்பது இமயமலைக்கு போய் வருவதுமாக இருந்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் ஜெயிலர் படம் வெளியாகவுள்ள இந்த சமயத்தில் ரஜினி இமயமலைக்கு சென்றிருப்பது குறித்த ரகசிய தகவல் கசிந்துள்ளது. அதாவது ஜெயிலர் திரைப்படத்தை பெரிதும் நம்பியிருந்த ரஜினி அது எதிர்பார்த்தது போல் இல்லை என்றும் அதனால் விரக்தி அடைந்து நெல்சன் மீது வைத்திருந்த அலாதி நம்பிக்கை சுக்குநூறாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

முழு படத்தையும் பார்த்த ரஜினி படம் குறித்த எந்த பதிலையும் சொல்லாமல் அமைதியாக எழுந்து சென்றுவிட்டாராம். மேலும், திடீரென இமயமலைக்கு சென்றுள்ளார். இதெல்லாம் ஐஸ்வர்யா தனுஷ் பிரிவு, படத்தோல்வி, சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி, விஜய் மீது வெறுப்பு, ஜெயிலர் படம் அதிருப்தி இப்படி பல பிரச்சனைகளில் மன உளைச்சலுக்கு ஆளாகி தான் அமைதி வேண்டி சென்றிருக்கிறார் என கூறப்படுகிறது. இதனை அறிந்து ரஜினி ரசிகர்கள் மிகுந்த வேதனையில் இருகிறார்கள்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!