கடமைக்கு நடித்துக் கொடுத்த ரஜினி… அப்செட்டான இயக்குநர் : பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம்!!
Author: Udayachandran RadhaKrishnan24 February 2023, 2:16 pm
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ரஜினி. தனது திறமை, ஸ்டைல், நடிப்பு மூலம் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றவர்.
இவரை வைத்து படம் இயக்க இயக்குநர்கள் போட்டி போட்டு வருகின்றனர். அப்படி ஒரு இயக்குநர் தான் ரஜினியை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டுள்ளார்.
பொதுவாக ரஜினி, இயக்குநர்களுக்காக கதையை கூட கேட்காமல் நடித்து விடுவார். அப்படி தான் இயக்குநர் சுந்தரராஜன் ரஜினியி வைத்து முதல் முதலில் எடுத்த படம் ராஜாதி ராஜா.
இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டோமே என கடமைக்கு ரஜினி நடித்துள்ளார். மேலும் தனது நண்பர்களிடம் இந்த படம் தனக்கு வெற்றியை தராது என அடிக்கடி கூறியுள்ளார்.
ஆனால் படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. அதிலும் 1989ல் முதல் நாளே 95 லட்சம் ரூபாய் வசூல் பெற்றது. இந்த படத்தில் ரஜினி இரட்டை வேட்த்தில் நடித்து அசத்தியிருப்பார்.
படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனையை படைத்தது. தென்காசி மாவட்டத்தில் முதன்முதலில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய தமிழ் படம் இதுவே.
இந்த படம் ரஜினிக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் நடிக்கும் போது இயக்குநரை அலட்சியமாக நினைத்துள்ளார் ரஜினி, ஆனால் அவரே வாயடைத்து போகும் அளவுக்கு படம் பெரும் சாதனைபடைத்தது. பின்னர் தான் இயக்குநரை தவறாக நினைத்துவிட்டோம் என வருத்தப்பட்டுள்ளார்.