இவர் தேறவே மாட்டார் என நினைத்த ரஜினி.. -கணிப்பு தவறாகி விட்டதாக நொந்து கொண்ட சூப்பர் ஸ்டார்..!
Author: Vignesh2 August 2023, 10:43 am
பொதுவாக நடிகர்கள் ஏதாவது ஒரு விழாவிற்கு செல்லும்போது சக நடிகர்கள் அவர்களை புகழ்ந்து தள்ளுவார்கள். அந்த விஷயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முற்றிலும் மாறுபட்டவர். தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படையாகவும், அதேபோன்று மற்றவர்கள் மனது புண்படாத வகையில் நகைச்சுவையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்து விடுவார்.
அப்படி ஒரு நடிகரின் படத்தை பார்த்துவிட்டு இவர் எல்லாம் எப்படி ஹீரோவாக முடியும் இவர் தேரமாட்டார் என நினைத்துக் கொண்டாராம் ரஜினி. அந்த நினைப்பை தவிடு பொடியாக்கி அந்த நடிகரின் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல பேர் முன்னிலையில் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
அதை மேடையில் தன்னுடைய கணிப்பு தவறாகிவிட்டது என அந்த நடிகரையும் பாராட்டியுள்ளார். அப்படி ரஜினிகாந்த் தேரவே மாட்டார் என நினைத்தவர் வேறு யாருமில்லை நடிகர் சூர்யா தான்.
அவர் அறிமுகமான நேருக்கு நேர் திரைப்படத்தை பார்த்துவிட்டு இவருக்கு நடிக்கவே தெரியவில்லை என்றும், இவரை ஏன் ஹீரோவாக தேர்ந்தெடுத்தீர்கள் என்று ரஜினி நினைத்தாராம். இந்த விஷயத்தை ரஜினிகாந்த் காப்பான் இசை வெளியீட்டு விழாவின் போது சூர்யாவின் முன்னிலையில் தெரிவித்திருந்தார்.
சூர்யாவை பற்றி அப்படி நினைத்த ரஜினி அவரின் நந்தா, பிதாமகன், காக்க காக்க மற்றும் கஜினி படங்களை பார்த்துவிட்டு மிரண்டு போய்விட்டதாகவும், தெரிவித்துள்ளார். சூர்யாவின் அசுர வளர்ச்சியால் ரஜினிகாந்தை ஒரு சமயத்தில் மிரண்டு போனதாகவும் தெரிவித்துள்ளார்.