பிரபல இயக்குனரை நம்ப வைத்து ஏமாற்றிய சூப்பர் ஸ்டார்..? உங்க மேல மரியாதை இருக்கு சார்.. இப்படி பண்ணிட்டீங்களே என புலம்பல்..!

Author: Vignesh
22 December 2022, 3:45 pm

கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் லவ் டுடே. இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.

மேலும் ராதிகா, சத்யராஜ், யோகி பாபு மற்றும் ரவீனா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியான இப்படம் பாஸிட்டிவான விமர்சனங்களுடன் வசூலை வாரி குவித்து வருகிறது.

lovetoday-updatenews360

ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். லவ் டுடே படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டினார்.

தற்போது ரஜினிகாந்த ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்தின் 171 படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகிவுள்ளது.

cibi chakravarthy director rajini - updatenews360

மேலும், பிரதீப் லண்டன் சென்று லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரனிடம் கதை கூறியுள்ளார் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதற்கு முன்பு ரஜினிகாந்தின் 171 திரைப்படத்தை சிபிச் சக்கரவர்த்தி இயக்கவிருந்தது, ஆனால் ரஜினிக்கு கதை பிடிக்காததால் இந்த கூட்டணி ட்ராப் ஆனதாக கூறப்படுகிறது.

இதனிடையே, உங்க மேல மரியாதை இருக்கு சார்.. இப்படி பண்ணிட்டீங்களே என சிபிச் சக்கரவர்த்தி புலம்பி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 619

    1

    1