தப்பு பண்ணிட்டேன்…. ஜெயிலர் வில்லனிடம் மன்னிப்புக்கேட்ட ரஜினிகாந்த் – ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்!
Author: Shree9 August 2023, 1:37 pm
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ளது. காவாலா, டைகர் ஹுக்கும் பாடல்கள் மற்றும ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்தின் பேச்சு ஆகியவை படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் பெரிதும் தூண்டியுள்ளது.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து தமன்னா, ரம்யா கிருஷ்ணன், விஜய் வசந்த், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்து பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. நாளை ரிலீஸை வைத்துக்கொண்டு ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இதற்கு காரணம் படம் எதிர்பார்த்தது போன்று வரவில்லை எனவும் இது ஒர்க்அவுட் ஆகாது என்றும் அப்செட் ஆகிவிட்டாராம். மேலும் முழு படத்தை பார்த்த ரஜினி படம் குறித்து எதுவுமே சொல்லாமல் எழுந்து சென்றுவிட்டாராம். உடனடியாக அமைதி பயணமாக இமயமலைக்கு சென்றுவிட்டார் என செய்திகள் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்த வில்லன் நடிகர் ஜாக்கி ஷெராப்பிடம் ரஜினி மன்னிப்பு கேட்ட சம்பவம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதாவது ரஜினி தன்னுடைய ஷூட்டிங் முடித்துவிட்டு காரில் ஏறி வீட்டிற்கு கிளம்பினாராம். ரஜினி காட்சி படமாக்கி முடித்த பின்னர் ஜாக்கி ஷெராப் காட்சி படமாக்க படக்குழு தயாராகிக்கொண்டிருந்த நேரம் அது.
அப்போது காரில் இருந்து இறங்கி வந்த ரஜினி ஷாக்கி ஷெராப்பிடம் ” மன்னித்து விடுங்கள் நான் உங்களிடம் சொல்லாமலே கிளம்பிட்டேன். வேண்டுமென்றால் உங்களுக்காக இருக்கிறேன் என சொன்னராம்.” இதனை பேட்டி ஒன்றில் ஷாக்கி ஷெராப் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், ரஜினி எனது நீண்ட நாள் நண்பர். அவர் எனக்கு பல வருடத்திற்கு முன்னிருந்தே பழக்கம். என்னுடைய திருமணத்தில் கலந்துக்கொண்ட வெகு சிலரில் ஒருவர் ரஜினி. அதை நான் என் வாழ்நாள் முழுக்க மறக்கவே மாட்டேன். இந்த பட வாய்ப்பு கிடைத்ததும் ரஜினிக்காக மறுக்கவே முடியவில்லை. அதனால் ஒப்புக்கொண்டேன் என கூறியுள்ளார்.