குடிபோதையில் ரகளை செய்த ரஜினி கைது.. 44 ஆண்டுகளுக்கு முன் நடந்த பிளாஷ்பேக்..!

Author: Vignesh
14 March 2024, 12:26 pm

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடுத்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது. பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய ரஜினிகாந்த் அதன் பின்னர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

rajini - updatenews360

ஆரம்பத்தில் பெரும்பாலும் வில்லன் ரோல்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் பின்னர் அதிரடி ஹீரோவாக அவதாரமெடுத்து சூப்பர் ஸ்டார், தலைவர் என ரசிகர்களால் பட்டம் சூட்டப்பட்டார். கடைசியாக மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

vettaiyan rajini

தற்போது, வேட்டையன் படத்தில் பிசியாக நடித்து வரும் ரஜினிகாந்த் பல நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்துடன் சென்று வருகிறார். சமீபத்தில், கூட அம்பானி வீட்டு கல்யாணத்தில் கலந்து கொண்டு வீட்டில் வேலை செய்யும் வேலை பெண்ணை அவமதித்து நடந்து கொண்ட வீடியோ விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில், ரஜினிகாந்த் 1979 ஆம் ஆண்டு படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கு வேலை முடிந்தவுடன் சென்னை திரும்பியுள்ளார்.

rajini - updatenews360

அப்போது, ஹைதராபாத் விமான நிலையத்தில் மது அருந்தி போதையில் சென்றுள்ளார் ரஜினி. அவர் நண்பரிடம் தகாத வார்த்தையில் தாக்கி பேசி உள்ளார். இதனால், இருவருக்கும் சண்டை வெடித்தது. அந்த நேரத்தில், விமான அதிகாரிகள் சமாதானப்படுத்த முயன்றும் மிகவும் மோசமாக சண்டை போட்டாராம். அவரை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணாடி அறையில் இருக்க வைத்துள்ளார்கள். ரஜினி கண்ணாடியை உடைத்து விட்டு அட்டகாசம் செய்து உள்ளார். கடைசியில், ஹைதராபாத் போலீசார் அவரை கைது செய்து பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 194

    0

    0