ரஜினியை சந்தித்த பிரபல தயாரிப்பு நிறுவனம்…படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்.!

Author: Selvan
5 March 2025, 8:00 pm

ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ்

2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக இயக்கவிருக்கிறார்.

இதையும் படியுங்க: சிவாஜியின் வீடு பிரபுக்கு சொந்தம்…ஜப்தி உத்தரவை எதிர்த்து ராம்குமார் மனு.!

வேல்ஸ் நிறுவனம்,ரெளடி பிக்சர்ஸ்,அவ்னி சினி மேக்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.நயன்தாரா மீண்டும் அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

படப்பூஜை மார்ச் 6, 2025 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது, மேலும் மார்ச் 15 முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி பணியாற்றவுள்ளார்.

இதற்கிடையில்,வேல்ஸ் நிறுவனர் ஐசரி கணேஷ்,நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து அவரிடம் வாழ்த்துகளை பெற்றுள்ளார்,இதற்கான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் யார் நடிக்க உள்ளார்கள் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை,முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகுந்த பொருட்செலவில்,தொழில்நுட்ப ரீதியாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், ‘மூக்குத்தி அம்மன் 2’ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!
  • Leave a Reply