சூப்பர் ஸ்டாரின் காலில் விழுந்து குழந்தைகளுடன் ஆசீர்வாதம்..! நெகிழ்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்ட புகைப்படங்கள் இதோ..!

Author: Vignesh
18 January 2023, 4:30 pm

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்தவர்கள் தான் தனுஷ்- ஐஸ்வர்யா, இவர்கள் கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முறிந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினர்.

இதனிடையே, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘பயணி’ ஆல்பத்திற்கு நடிகர் தனுஷ் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் நன்றி தெரிவித்தார். இதனால் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இதன்பின் தனுஷ் படங்களில் பிஸியாக நடித்தும் ஐஸ்வர்யா தான் இயக்கும் படத்தின் வேலைகளிலும் பிஸியாக இருந்து வருகிறார்கள். கிடைக்கும் நேரத்தில் ஒர்க்கவுட், போட்டோஷூட் என்று இணையத்தில் ஐஸ்வர்யா ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்த ஆண்டு மகன்களுக்காக சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்ப்பாத்திருந்த நிலையில் ஒரு வருடம் ஆகியும் அமைதியாக இருவரும் இருந்து வருகிறார்கள்.

lal-salaam - updatenews360

இப்படியிருக்கும் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – லதா-விடம் சென்று யாத்ரா, லிங்காவுடன் ஐஸ்வர்யா காலில் விழுந்து ஆசீர் பெற்றுள்ள புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

24 ஆண்டுகள் கழித்து தனியாக மகன்கள் தன் அப்பா குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடியதை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 556

    1

    0