அஜித்தை வளரவிடாமல் தடுக்க ரஜினி செய்த மட்டமான செயல்.. ஓப்பனாக பேசிய பிரபல இயக்குனர்..!

Author: Vignesh
10 November 2023, 4:59 pm

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புது படம் எது வெளியானாலும் உடனே பார்த்து விடுவாராம். அந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துவிட்ட உடனே அப்படத்தின் இயக்குனரை வீட்டிற்கு வரவைத்து மரியாதை செய்து அடுத்த கதை எதாவது இருக்கா என கேட்பாராம்.

அவர் அப்படிதான் இயக்குநர்களை தேர்வு செய்து பல வருடங்களாக நடித்து வருகிறார். இந்நிலையில் லிங்குசாமி இயக்கி மாதவன் நடித்து சூப்பர் ஹிட்டான ரன் படத்தினை ரஜினிகாந்த் பார்த்து உடனே லிங்குசாமியை வீட்டுக்கு அழைத்துள்ளார்.

அப்போது அவரின் அடுத்த படமான “ஜி”கதையில் அஜித் நடிப்பதாக கூறனாம். கதையை கேட்ட ரஜினிகாந்த் நான் நடிக்கிறேன் என கூற லிங்குசாமி உங்களால் முடியாது. அது கல்லூரி மாணவராக உங்களுக்கு செட்டாகாது என்று கூறியிருக்கிறார்.

என் கதையில் ஹீரோ காலேஜ் பையன் எப்படி சார் உங்களுக்கு மாற்ற முடியும் என்று லிங்குசாமி கூற, அப்படியே அதை ஃபேக்டரிக்கு கொண்டு வந்து அரசியல் படமா பண்ணலாமே என்று கதையை மாற்ற சொன்னார் என்றும் ஆனால் அதை அஜித் ஓகே சொல்ல ரஜினியை விட்டுவிட்டு அஜித்தை வைத்து ஜீ படத்தை இயக்கினேன் என்று கூறியிருக்கிறார். இப்படி ஒரு நடிகருக்காக எழுதிய கதையை மாற்ற சொல்லி அஜித்தின் வாய்ப்பை தட்டிப்பறிக்க பிளான் போட்டிருப்பதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

  • sundar c openly talks about nayanthara in mookuthi amman sets நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!