கூலி படத்தின் ஓடிடி மற்றும் வெளிநாட்டு உரிமம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து,சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்ற இப்படம்,ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
இதையும் படியுங்க: முன்னாள் மனைவி என்று கூப்பிட வேண்டாம்..சாய்ரா பானு வேண்டுகோள்.!
ரஜினிகாந்துடன் இணைந்து நாகார்ஜுனா,உபேந்திரா,செளபின் சாஹிர்,ஸ்ருதி ஹாசன்,ஆமீர் கான்,சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க,படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் வெளியான தகவலின்படி கூலி திரைப்படத்தின் ஓடிடி உரிமம் ரூ.120 கோடிக்கு அமேசான் பிரைம் வீடியோ நிறுவனத்தால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல்,வெளிநாட்டு ரிலீஸ் உரிமம் மட்டும் ரூ.75 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன் காரணமாக கூலி திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே ரூ.195 கோடி வரை வருவாய் ஈட்டியுள்ளது.
இத்திரைப்படத்தின் மொத்த தயாரிப்பு செலவு ரூ.280 கோடி என கூறப்படுகிறது. மேலும்,படக்குழு 2024 ஆகஸ்ட் 15 – சுதந்திர தினத்தன்று இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.