அவ்வளவு வொர்த் இல்லை.. ரஜினி மகளுக்கு சுத்தி சுத்தி அடிக்கும் கெட்ட நேரம்..!

Author: Vignesh
11 July 2024, 9:38 am

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர்தான் ரஜினியின் இரண்டாம் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் வரைகலை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

Soundarya-Rajinikanth -updatenews360

பின்னர் பெரும்பாலும் ரஜினியின் படங்களில் வரைகலை வடிவமைப்பாளராக பணியாற்றியதுடன் மஜா, சண்டக்கோழி, சிவகாசி, கத்தி என பல படங்களில் பணியாற்றி உள்ளார்.

Soundarya-Rajinikanth -updatenews360

2010ஆம் ஆண்டு கோவா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி, கோச்சடையான் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை. பின்னர் 2017 ஆம் ஆண்டு தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கியிருந்தார். இதில், பல உச்ச நட்சத்திரங்கள் நடித்திருந்த போதிலும், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

Soundarya-Rajinikanth -updatenews360

இந்நிலையில், தனுஷ் நடித்த விஐபி 2 படத்தை இயக்கிய இவர் எக்ஸ் தளத்தை போல் ஹுட் என்ற தளத்தை ஆரம்பித்தார். இதில், ரஜினியும் இணைந்து தன் மகளுக்காக பிரமோட் செய்திருந்தார். ஆனால், தற்போது அந்த தளம் போதிய வரவேற்பு இல்லாமல் நிறுத்தப் போவதாக அறிவித்து விட்டனர். எடுத்த படமும் தோல்வி, தற்போது இதுவும் இல்லை என்ற வருத்தத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளாராம். இதனை பார்த்த ரசிகர்கள் இதுவும் போச்சா என்று கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.

  • Sex is for pleasure, not for having a baby: Famous actress's bold comment உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!