விவாகரத்துக்கு பின் 6 மாதம் கர்ப்பமாக இருக்கும் ரஜினி மகள்… சூப்பர் ஸ்டார் வீட்டில் என்ன தான் நடக்கிறது?

Author: Shree
11 August 2023, 5:13 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர்தான் ரஜினியின் இரண்டாம் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் வரைகலை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். பின்னர் பெரும்பாலும் ரஜினியின் படங்களில் வரைகலை வடிவமைப்பாளராக பணியாற்றியதுடன் மஜா, சண்டக்கோழி, சிவகாசி, கத்தி என பல படங்களில் பணியாற்றி உள்ளார்.

2010ஆம் ஆண்டு கோவா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி, கோச்சடையான் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை. பின்னர் 2017 ஆம் ஆண்டு தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கியிருந்தார். இதில், பல உச்ச நட்சத்திரங்கள் நடித்திருந்த போதிலும், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

சௌந்தர்யா ரஜினிகாந்த் 2010ம் ஆண்டு தொழில் அதிபரான அஸ்வின் ராம்குமாரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு வேத் என்ற மகன் பிறந்தார். அதன் பின்னர் இருவரும் கருத்து வேறுபாட்டினால் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின்னர் விசாகன் வணங்காமுடி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இருவரும் ஏற்கனவே வீர் என்ற மகன் பிறந்தான். இந்நிலையில் சௌந்தர்யா மீண்டும் 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறாராம். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ஒரு பக்கம் மூத்த மகள் ஐஸ்வர்யா வாழ்க்கை இழந்து குடும்பத்திற்கு சோகத்தை கொடுத்ததில் இருந்து வருத்தத்தில் இருந்த ரஜினியை இளைய மகள் சௌந்தர்யா மீட்டெடுத்துள்ளார்.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!