கமல் பொண்ணுக்கு ஒர்க் அவுட் ஆனது ரஜினி பொண்ணுக்கு எடுபடல.. வளரமுடியாமல் தவிக்கும் வாரிசுகள்..!

Author: Vignesh
5 August 2023, 4:30 pm

சினிமா துறையை பொறுத்த வரையில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர் நடிகைகள் தங்களின் வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி அழகு பார்ப்பார்கள். அந்த வகையில், அப்பா அம்மா திரையில் ஜொலித்தாலும் அவர்களின் வழியில் வந்த வாரிசுகள் வெற்றி என்பது சவாலாக தான் இருந்து வருகிறது. ஆனால் அவர்களுக்கு எளிதாக வாய்ப்பு கிடைப்பதில்லை அப்படி கிடைத்தாலும், திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் அப்படி அம்மாவோ அப்பாவோ பெரிய நடிகர்களாகவும் நடிகைகளாகவும் இருந்தும் எந்த பயனும் இல்லாமல் இருப்பவர்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

உலகநாயகன் மகள்கள்

kamal-updatenews360

கமலஹாசன் மகளான ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் இருவரின் அம்மா அப்பா பெரிய நடிகர் என நினைக்காமல் அவர்களின் உதவி இல்லாமல் சினிமாவில் தனக்கு என ஒரு இடத்தைப் பிடித்தவர்கள். அதில் மூத்த மகன் சுருதியின் கேரியர் மட்டும் வெற்றியை பெற்று இருக்கிறது. ஆனால், அக்ஷரா ஹாசன் அதற்காக தற்போது வரை உழைத்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள்கள்

ரஜினிகாந்த் மகள்களான ஐஸ்வர்யா, சௌந்தர்யா அப்படி கிடையாது. அப்பாவின் உதவியால் வாய்ப்பு பெற்று அவரை வைத்து இயக்கவும் செய்திருக்கிறார்கள். சௌந்தர்யாவின் கேரியர்காக பல கோடி செலவில் கோச்சடையான் படத்திலும் ரஜினிகாந்த் நடித்த மகளுக்கு உதவி செய்தார்.

Rajinikanths-updatenews360

ஐஸ்வர்யா தனுஷை விட்டு தனியாக இருப்பதை நினைத்து அவர் இயக்கும் படத்தில் நடித்து படத்தின் மார்க்கெட்டை உயர்த்தி உதவியிருக்கிறார். இருவரின் கேரியர் போல் திருமண வாழ்க்கையும் சரியாக அமைத்து வைக்க முடியவில்லை என்று ரஜினிகாந்த் வருத்தமும் பட்டதாக தெரியவருகிறது.

அதேபோல், சரத்குமார் மகள் வரலட்சுமி சினிமாவில் நடித்துவரும் நடிகையாகவே பல ஆண்டுகள் திகழ்ந்து வருகிறார். அதேபோல் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுனன் சினிமாவில் நடித்திருந்தாலும் நல்ல இடத்தை பிடிக்க முடியாமல் விரைவில் திருமணம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 572

    2

    2