சூப்பர் ஸ்டார் கையில் சரக்கு.. சர்ச்சையை ஏற்படுத்திய பார்ட்டி புகைப்படம்..!
Author: Vignesh31 January 2024, 5:54 pm
கர்நாடக மாநிலத்தில் பிறந்து, வளர்ந்து தமிழக மக்களின் மனங்களில் நிரந்தர இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் கடந்து வந்த பாதை மிக கடினமானது. திரைத்துறையில் ஜெயிக்க வேண்டும் என்றால் பளபளப்புடன் கூடிய தேஜசான உடல் தோற்றத்தோடு, வெள்ளையாக இருக்க வேண்டும் என்கிற ஃபார்முலாவையே மாற்றியவர் என்றால் அது ரஜினிகாந்த் தான்.
இந்த வயதிலும் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சினிமாவில் டப் கொடுத்து வருகிறார். வசூல் நாயகனாகவும், ரஜினிகாந்த் டாப்பில் இருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் கூட இந்த குதிரை அப்போதே நின்றுவிடும் என நினைத்தார்கள் ஆனால், 40 வருடத்தை தாண்டி ஓடிக்கொண்டிருப்பதை பார்த்து பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரஜினியின் Unseen புகைப்படம் ஒன்று திடீரென தற்போது வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் கையில் மது வைத்திருக்கும் இந்த புகைப்படத்தில் அவருடன் மலையால திரை உலகின் முன்னணி நடிகர்களாக இருக்கும் மோகன்லாலும் இருக்கிறார். மேலும், நவரச நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கார்த்திக்கும் இவர்களுடன் உள்ளார்.
பார்ட்டி ஒன்றில் பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பார்ட்டியில் இவர்கள் மட்டும் இன்றி திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் வெளியான சமயத்தில் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தது.
மேலும், மது அருந்துவதும் சிகரெட் பிடிப்பதும் கேடு இதை ரஜினிகாந்த் தனது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு என பல மேடைகளில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இது போன்ற கெட்ட விஷயங்களில் இருந்து தன்னை மாற்றியவர் தனது மனைவி லதா என்று ரஜினிகாந்த் பெருமிதத்துடன் கூறியிருந்தார்.