இனி நான் நடிக்க போவதில்லை….இது தான் என் கடைசி படம் – ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்த ரஜினி?

Author: Shree
18 May 2023, 10:53 am

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடித்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.

தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால்சலாம் படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் கூட இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ட்ரோல் செய்யப்பட்டது.

லால்சலாம் படத்தை முடித்த பின்னர் ரஜினி டிஜே ஞானவேல் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் கதையை கேட்டு ரஜினி ஓகே சொல்லிவிட படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் துவங்கவுள்ளது.

இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடந்தினராம் இயக்குனர் டிஜே ஞானவேல். அப்படத்தின் கதை விக்ரமுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். ஆனால், ரஜினிக்கு வில்லனாக நடிப்பதா? அதன் பின் என் கெரியர் என்ன ஆகும்? என சற்று யோசித்த விக்ரமுக்கு உடனே லைக்கா நிறுவனத்திடம் இருந்து போன் வந்துள்ளது. எடுத்த எடுப்பிலேயே ரூ. 50 கோடி சம்பளம் கொடுப்பதாக கூற விக்ரம் ஓகே சொல்லிவிட்டராம்.

இந்த படத்திற்கு பிறகு ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171 படத்தில் நடிக்கவிருக்கிறார். இது தான் அவரது கடைசி திரைப்படமாக இருக்குமாம். லோகேஷ் தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். லியோ படத்தில் நடித்து வரும் பிரபல இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் தான் இந்த தகவலை கூறியிருக்கிறார். இந்த செய்தி காட்டுத்தீயாக பரவி வர ரஜினியின் ரசிகர்கள் அனைவரும் வேதனை அடைந்துளளனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 2370

    8

    5