அம்பானி வீட்டு திருமணத்தில் டான்ஸ்; தனது ஸ்டைலில் பதில் சொன்ன சூப்பர் ஸ்டார்
Author: Sudha17 July 2024, 11:44 am
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் சமீபத்தில் விமரிசையாக திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி மற்றும் மகள் சவுந்தர்யா, அவரது கணவர் ஆகியோருடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த திருமணத்தில் ரஜினிகாந்த் நடனமாடினார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.இதைப்பார்த்த ரசிகர்கள் பலர் ரஜினிகாந்தின் ஸ்டைல் ஸ்டைல் தான் போன்ற கமெண்ட்களை செய்திருந்தனர்.
இன்னும் சிலரோ ரஜினிகாந்த் திருமண நிகழ்வில் இப்படி ஆட வேண்டுமா? என்கிற ரீதியில் விமர்சனமும் செய்திருந்தனர்.
இந்த நிலையில் திருமணம் முடிந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, “இந்த திருமணம் ஆனந்த் அம்பானி வீட்டில் நடைபெறும் கடைசி திருமணம். அதனால் இதை மகிழ்ச்சியாக கொண்டாட முடிவு செய்தேன். மேலும் இது எனக்கு ஒரு மறக்க முடியாத தருணமாக அமைந்தது ” என்று கூறினார். மேலும் இந்தியன் 2 திரைப்படத்தைக் குறித்து கேட்ட போது தன் நண்பர் கமல்ஹாசனின் திரைப்படத்தை காண ஆவலாக இருப்பதாகத் தெரிவித்தார்.