ஜெயிலர் டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா? பெங்களூருக்கு படையெடுக்கும் ரஜினி ரசிகர்கள்!
Author: Shree7 August 2023, 5:14 pm
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.
தற்போது படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்தப் படம் வரும் 10-ம் தேதி வெளியாகிறது. இதில் தமன்னா எப்போதும் இல்லாத வகையில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார். அதிலும் காவலா என்ற பாடலுக்கு மரணகுத்து ஆட்டம் போட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். குறிப்பாக அந்த பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினியே ரசிகர்களுக்கு அவுட் ஆஃப் போகஸில் தான் தெரிந்தார். அந்த அளவுக்கு தமன்னாவின் கவர்ச்சி அழகை திகட்ட திகட்ட ரசித்தனர் ரசிகர்கள்.
மேலும் படத்தின் முன் பதிவு கோடிகளில் கலெக்ஷன்ஸ் குவித்துவிட்டது. அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை மெர்சலாக்கியது. இப்படத்தில் ரஜினி ” டைகர் முத்துவேல் பாண்டியன்” என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவரது மனைவியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இதில் வில்லனாக கயல் பட நடிகர் விநாயகன் மிரட்டியிருக்கிறார். மேலும், யோகி பாபு வழக்கம் போல் காமெடியில் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.
படம் ரிலீஸ் தேதியை நெருங்குவதால் கடைசிகட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது, தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் காட்சி 9 மணிக்கு தான் தொடங்க இருக்கிறதாம்.
ஆனால், பெங்களூரில் காலை 6 மணிக்கே தொடங்க இருக்கிறது. அதிலும் பெங்களூருவில் முகுந்தா, பாலாஜி, பூர்ணிமா உள்ளிட்ட தனி திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தமிழ ரசிகர்கள் பெங்களூருக்கு படையெடுக்கிறார்கள். ஆனால், அதில் ஒரு வருத்தம் என்னவென்றால், பெங்களூரில் ஒரு டிக்கெட் ரூ.300 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்துள்ளனர். பி.வி.ஆர்., ஐநாக்ஸ் போன்ற மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூ.600 முதல் ரூ.2200 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.