ஹாலிவுட்டில் கலக்கிய வானவராயன்; கலக்கிக் கொண்டிருக்கும் வல்லவராயன் !,,
Author: Sudha5 July 2024, 11:15 am
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 1988 இல் வெளிவந்த ஹாலிவுட் ஆக்ஷன் திரைப்படம் பிளட் ஸ்டோன்.
பெங்களூருக்கு வணிகப் பயணமாக வருகிறார்கள் புதுமண அமெரிக்கத் தம்பதிகள். இதில் மனைவியின் பையில் “பிளட் ஸ்டோன்”எனும் அறிய வகை மாணிக்கம் திருடர்களால் வைக்கப் படுகிறது.
மனைவி கடத்தப்படுகிறாள், கணவன் தன் மனைவியை காப்பாற்ற மாணிக்கத்தை மீட்டெடுக்க ஒரு திறமையுள்ள டாக்ஸி டிரைவருடன் இணைந்து கொள்கிறான். அந்த டாக்ஸி டிரைவர் கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார்.

எஜமான் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் நெப்போலியன் “வானவராயன் வல்லவராயன்” கதாப்பாத்திரத்தில் இணைந்து நடித்திருந்தனர்.இருவருக்குள்ளும் ஒரு நெருங்கிய நட்பு உண்டு.
இப்போது ஹாலிவுட்டில் படங்களில் நடித்து வருகிறார் நெப்போலியன்.2019 இல் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் சாம் லோகன் கலேகி இயக்கிய டெவில்’ஸ் நைட்: டான் ஆஃப் தி நைன் ரூஜ் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்தார். அவர் ஜி.வி.பிரகாஷின் முதல் ஹாலிவுட் படமான ‘ட்ராப் சிட்டி’ யிலும் நடித்திருந்தார்.அதில் அவர் இசை தயாரிப்பாளராக நடித்திருந்தார்.
இப்படியாக இப்போது ஹாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கிறார் வல்லவராயன்.