மூத்தமகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் லால் சலாம். . இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். முஸ்லீம் நபராக இப்படத்தில் நடித்துள்ள ரஜினி மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.
லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்று இருக்கிறது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மும்பையில் நடத்தப்பட்டது. கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து, ஜாதி, மதம் என அரசியலையும் சேர்த்து லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
இப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாா். நாளை உலகம் முழுக்க வெளியாக உள்ள இப்படத்தின் ப்ரீ புக்கிங் அமோக வசூலை ஈட்டியுள்ளது. அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய் ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் , ” என் அப்பா சங்கி கிடையாது” என ஐஸ்வர்யா பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. அதுவே படத்திற்கு ப்ரோமோஷனாகவும் அமைந்தது.
இந்நிலையில் இப்படத்தில் நடிக்க ரஜினி ஒவ்வொரு நிமிடத்துக்கும் ரூ. 1 கோடி வீதம் மொத்தமுள்ள 45 நிமிடங்களுக்கு ரூ. 45 கோடி என கணக்கிட்டு சம்பளம் வாங்கினாராம். முன்னரே நன்றாக பணம் சம்பாதிக்கிற மாதிரி எதாவது கதை சொல்லு என மகளிடம் கூறிய ரஜினி அதை கடைபிடித்து சம்பளத்தில் இம்மி அளவு கூட குறையக்கூடாது என கறார் காட்டி ரூ. 45 கோடி வாங்கினாராம். முன்னதாக ஜெயிலர் திரைப்படத்திற்கு ரூ. 110 கோடி சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
சுமாரான நடிகர் நடிகர் சூர்யா தற்போது டாப் நடிகராக வலம் வந்தாலும் அவர் நடிக்க வந்த புதிதில் அவரது நடிப்பை…
கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் சிவராமன் விநாயகா எண்டர்பிரைசஸ் மற்றும் விஜயா பார்மா என்ற பெயரில் இரண்டு நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.…
கங்குவா தோல்வி சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த “கங்குவா” திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் இத்திரைப்படம்…
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி உடனே அமைச்சராக பதவியேற்றார். மின்துறை மற்றும் மதுவிலக்கு…
படுதோல்வி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியடைந்தது.…
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் லியோ. திரிஷா, மிஷ்கின் சஞ்சய் தத், அர்ஜூன் உட்பட பலர்…
This website uses cookies.